கே.சி பழனிசாமியை அதிமுகவில் இருந்து நீக்கிய பாஜக!

வாக்கெடுப்பின் போது வெளிநடப்பு செய்து மோடி அரசை ஆதரிக்கப் போகும் அதிமுக!

நிர்பயாவின் அம்மாவே இவ்ளோ அழகு அப்போ நிர்பயா :அதிச்சியளித்த டி.ஜி.பி

அதிமுக எம்.பிக்களை நம்பி மோடி அரசு: பயன்படுத்துவார்களா ஒபிஎஸ்-இபிஎஸ்!

மோடி அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருகிறது தெலுங்கு தேசம்!

பாடம் எடுப்பதை நிறுத்துங்கள்:யோகிக்கு சித்தராமையா அட்வைஸ்!

தமிழகத்தின் வளர்ச்சிக்கு திராவிட இயக்கமே காரணம்: பன்னீர்செல்வம்!

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரிய விவகாரத்தில் பாஜக மீது தெலுங்கு தேசம் கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்கும் என்று பேசிய கே.சி. பழனிசாமியை அதிமுகவை விட்டு நீக்கியிருக்கிறார்கள் ஒபிஎஸ்-இபிஎஸ்.

நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்க மாட்டோம் என்று தம்பிதுரையும், வைகைச் செல்வனும் மறைமுகமாக கூறிய நிலையில் கே.சி.பழனிசாமியின் கருத்து அதிமுகவை விட பாஜகவுக்கு அதிக அதிர்ச்சியை கொடுத்தது. உடனே தமிழக தலைவர்கள் இதை டெல்லி தலைமைக்குச் சொல்ல தம்பிதுரையை அழைத்து டெல்லி பாஜக தலைமை எச்சரித்ததாக கூறுகிறார்கள்.

ஒரு வேளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் அதிமுக எம்.பிக்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பாஜக அதிமுகவுக்கு உரிய கட்டளைகளை பிறப்பித்திருக்கிறது. அதிமுக எம்.பிக்கள் யாரும் டெல்லியை விட்டு வெளியேற வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.
இந்த செய்திகளை கேள்விப்பட்ட கே.சி பழனிசாமி அதிமுகவில் உள்ள பலரது மன நிலையை சேர்த்துத்தான் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்கும் என்று கூறினாராம். ஆனால் டெல்லியில் இருந்து வந்த ஒரே போன் காலை அடுத்து அடுத்த பத்தாவது நிமிடத்தில் கே.சி. பழனிசாமியை அதிமுக நீக்கியிருக்கிறது.
ஓபிஎஸ்-இபிஎஸ் ஆகியோர் அதிமுகவை பங்கிட்டுக் கொண்டதை தேர்தல் ஆணையம் இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை போட்டு உடைத்திருக்கும் கே.சி பழனிசாமி இந்த நியமனங்களுக்கு எதிராக விரைவில் நீதிமன்றத்திற்குச் செல்கிறார். மிக முக்கியமாக அவர் அவரை ஒபிஎஸ்-இபிஎஸ் நீக்கியிருந்தாலும் அவர் அதிமுகவை விட்டு வெளியேறும் எண்ணத்தில் இல்லை என்கிறார்கள்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.

*