நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பாஜக வெல்லும்:ஆனால்?

வாக்கெடுப்பின் போது வெளிநடப்பு செய்து மோடி அரசை ஆதரிக்கப் போகும் அதிமுக!

நிர்பயாவின் அம்மாவே இவ்ளோ அழகு அப்போ நிர்பயா :அதிச்சியளித்த டி.ஜி.பி

கே.சி பழனிசாமியை அதிமுகவில் இருந்து நீக்கிய பாஜக!

மோசமானது நடராஜன் உடல்நிலை: பரோலில் வருகிறார் சசிகலா

கடந்த 2104-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்த பாஜகவால் கூட்டணி கட்சிகளின் உதவியின்றி ஆட்சி நடத்துவதற்கான பெரும்பான்மை பலம் உள்ளது.
இப்போது பாஜக மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது எதிர்க்கட்சியோ பாஜகவின் எதிரணிக் கட்சிகளோ இல்லை. இதுவரை பாஜக கூட்டணியில் இருந்த தெலுங்கு தேசம் தான் ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை முன் வைத்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறது. ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி உருவாக்கிய அழுத்தமே சந்திரபாபு நாயுடுவை மோடியில் இருந்து விலக்கியிருக்கிறது. இந்த பிரிவு பாஜகவுக்கு பெரும் அடியாக அமைந்திருக்கிறது. காரணம் இந்த பிளவு தேசிய ஜனநாயகக் கூட்டணியை சிதைக்கத் துவங்கும் அளவுக்கு அரசியல் ரீதியாக பிளவை உண்டாக்கும்.
மக்களவையில் உள்ள 539 -க்களில் 274.எம்.பிக்கள் பாஜகவுக்கு உள்ளனர்.இது பெரும்பான்மைக்கு தேவையானதை விட அதிகமான எண்ணிக்கை எனும் நிலையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் பாஜக அரசு கவிழாது ஆனால், 2019-ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சென்ற முறை கூட்டணி வைத்தது போல வைத்துக் கொள்ள முடியாது. தமிழகத்தைப் பொறுத்தவரை அது அதிமுகவுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ கூட்டணி வைத்துக் கொள்ளும் ஆனால், மற்ற மாநிலங்களில் அது சாத்தியமில்லை. பாஜக கூட்டணியில் இருந்து பெரும்பலான கட்சிகள் விலகிச் சென்று விட்டன. பாஜக கூட்டணியில் இருந்து கட்சிகள் விலகினாலும் அவைகள் காங்கிரஸ் கூட்டணியில் இணைவது குறித்து ஆழ்ந்த யோசனையில் உள்ளன. காரணம் பாஜக மீதுள்ள அதிருப்தியை அறுவடை செய்யும் திராணி காங்கிரஸ் கட்சிக்கு இல்லை.
சமீப தேர்தல்களில் மாநில கட்சிகளிடம் தோற்கும் பாஜக நேரடியாக காங்கிரஸ் கட்சியோடு மோதும் இடங்களில் வெ
ற்றி பெறுகிறது. இது காங்கிரஸ் கட்சியை விட பாஜக இன்னும் பலம் பொறுந்திய கட்சியாக இருக்கிறது என்பதையே காட்டுகிறது.
தனித்து போட்டியிடுவதை தவிர்க்கும் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைத்து வருகிறது.
என்றாலும் இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்பும் பாஜகவுக்கு அடுத்து வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் அத்தனை எளிதானதல்ல!

 

அதிமுக எம்.பிக்களை நம்பி மோடி அரசு: பயன்படுத்துவார்களா ஒபிஎஸ்-இபிஎஸ்!

மோடி அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருகிறது தெலுங்கு தேசம்!

பாடம் எடுப்பதை நிறுத்துங்கள்:யோகிக்கு சித்தராமையா அட்வைஸ்!

தமிழகத்தின் வளர்ச்சிக்கு திராவிட இயக்கமே காரணம்: பன்னீர்செல்வம்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*