
சசிகலா கணவரை உயிரோடு பார்க்க அனுமதிக்காத ஒபிஎஸ்- இபிஎஸ்!
பாஜகவுக்கு ஆதரவாக நடமாடும் அதிமுக!
நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பாஜக வெல்லும்:ஆனால்?
விஷ்வ ஹிந்து பரிசத் அமைப்பின் ரத யாத்திரைக்கு அனுமதியளித்த தமிழக அரசு அதை எதிர்ப்பவர்களுக்கு 144 தடை உத்தரவு போட்டு அவர்களை கைது செய்து வருகிறது. செங்கோட்டை வாஞ்சிநாதன் சிலை அருகே நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல் போராட்டம் நடந்தது. அப்போது போலீசார் அவரை கைது செய்தனர்.
அப்போது பேசிய சீமான்:-
“தமிழகத்தை சுடுகடாக்க திட்டமிட்டு சதி செய்து வருகிறார்கள். ஆண்டாள் விவகாரம், பெரியார் சிலையை உடைப்பேன் என்று பேசினார்கள். இப்போது ஆங்குளத்தில் பெரியார் சிலையை உடைத்திருக்கிறார்கள். திட்டமிட்டு இந்த மண்ணை ரத்த பூமியாக்க ரதயாத்திரை என்ற பெயரில் ரத்த யாத்திரை நடத்துகிறார்கள். ராமராஜ்ஜியத்தை விட எங்கள் முன்னோர்கள் மிகச்சிறந்த ராஜ்ஜியத்தை கொடுத்தவர்கள். முதலில் நாட்டில் நீர் ஓட வேண்டும்.144 தடை உத்தரவு எங்களுக்குப் போட்டு ரத யாத்திரையை தமிழக அரசு வரவேற்கிறது.நான்கு மாநிலங்களில் ரத யாத்திரையை அனுமதித்திருக்கிறார்கள். நீங்கள் ஏன் அனுமதிக்க மறுக்கின்றீர்கள் எனக் கேட்கிறார்கள். அவர்கள் எல்லாம் செத்து விட்டார்கள். நீங்கள் மட்டும் ஏன் சாக மறுக்கின்றீர்கள் எனக் கேட்பது போலுள்ளது. அவர்கள் அடிமைகளாக இருப்பது போல நாமும் அடிமைகளாக இருக்க வேண்டிய அவசியமில்லை. தென் தமிழகத்தை நச்சுக்காடாக மாற்ற முனையும் இந்த மத வெறிச் சதிகளை முறியடிப்போம்” என்றார்.
வாக்கெடுப்பின் போது வெளிநடப்பு செய்து மோடி அரசை ஆதரிக்கப் போகும் அதிமுக!
நிர்பயாவின் அம்மாவே இவ்ளோ அழகு அப்போ நிர்பயா :அதிச்சியளித்த டி.ஜி.பி
Leave a Reply