ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் :ஸ்டாலின் அறிக்கை!

ஓராண்டில் 42 காவலர்கள் தற்கொலை: 1039 பேர் பணியை விட்டு ஓட்டம் ஏன்?

ஆராயி குடும்பத்திற்கு நடந்த கொடூரம் :சைக்கோ கொலையாளி கைது?

தமிழக விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பயிர்காப்பீடு தொகை எவளவு தெரியுமா?

தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் தாமிர ஆலையால் அந்த மாவட்ட மக்களும் அந்த மண்ணும் கடும் அபாயத்தை சந்தித்துக் கொண்டிருப்பதை அரசுக்கு எச்சரிக்கும் வகையில் பொதுமக்கள் ஒன்று திரண்டு வலிமையுடன் போராடி வருகிறார்கள். தன்னெழுச்சியான அவர்களின் வாழ்வுரிமைப் போராட்டத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகம் தார்மீக ஆதரவினைத் தெரிவித்துக் கொள்வதுடன், ஸ்டெர்லைட் ஆலையினால் ஏற்படும் பேராபத்துகளை உடனடியாக அரசாங்கம் தீவிர கவனத்தில் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

எந்த ஒரு வளர்ச்சித் திட்டமும் சுற்றுச்சூழலை மாசுபடுத்திக் கெடுக்காத வகையில் அமைக்கப்பட வேண்டும் என்பதை சட்டங்கள் வலியுறுத்தும் நிலையில், ஸ்டெர்லைட் ஆலையின் கழிவுகளால் தாமிரபரணி ஆறும், அதனால் பயன்பெறக்கூடிய விளைநிலங்களும் பாழ்பட்டுக் கிடப்பதோடு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மக்களின் உயிருக்கும் உலை வைக்கும் வகையில் புற்றுநோய், தோல்நோய் உள்ளிட்ட அபாயகரமான நோய்களை உருவாக்கி வருகிறது. இந்த ஆலையினால் நிலத்தடி நீரில் தாமிரம், ஆர்சனிக், புளோரைடு, குரோம் உள்ளிட்ட நச்சுப்பாதிப்புகள் கலந்துள்ளன. நிலத்தடி நீர் பாழ்பட்டதால் மண் பாதிப்படைந்து மக்களின் உயிர்ப்பலி தொடர்கிறது.

இதனைக் கூர்ந்துகவனித்து கடும்நடவடிக்கை எடுக்க வேண்டிய மாசு கட்டுப்பாட்டுத்துறை உரிய முறையில் செயல்படாத காரணத்தினால் ,இந்த மாவட்டத்தைச் சேர்ந்த பெரியவர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பலரும் புற்றுநோய்க்குள்ளாகி தமிழகத்தின் பல பகுதிகளிலும் உள்ள மருத்துவமனைகளில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் கொடூரமும் தொடர்கிறது.

இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்திற்கு எவ்வித அனுமதியும் வழங்கக்கூடாது என வலியுறுத்துவதுடன், தற்போது செயல்படும் ஆலையின் விதிமீறல்கள் மீது உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய அவசர அவசியத்தையும் உணர்த்துகிறேன்.

தூத்துக்குடி மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களின் மண்ணுக்கும் மக்களுக்கும் ஸ்டெர்லைட் ஆலையால் தொடர்ந்து ஆபத்து நீடிக்குமேயானால், அந்த ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆட்சியாளர்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். மக்களின் உயிரைக் காவு வாங்கி, மண்ணைப் பாழ்படுத்தும் கேடான செயல்பாடுகளை அரசு உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் எனவலியுறுத்துகிறேன்.

காவிரி துரோகம் :பெரும் போராட்டம் நடத்துவோம் :திமுக தீர்மானம்!

லிங்காயத்துகளுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்கியது கர்நாடக அரசு!

“நீங்கள் ஏன் பொய்யை பரப்புகின்றீர்கள்?”- பாஜகவுக்கு சந்திரபாபு நாயுடு கேள்வி!

அப்பலோ பிரதாப் ரெட்டிக்கு மாரடைப்பு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

சீமான் பாணியை கையிலெடுத்த எச்.ராஜா- வேல் ஊர்வலம் அறிவிப்பு!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*