அம்பேதகரின் பெயரை ‘கர்வாப்ஸி’ செய்து மாற்றிய பாஜக அரசு!

ஸ்டாலினை ஆளுநர் சந்தித்தன் பின்னணி என்ன?

குக்கர் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை!

நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தகுதி நீக்க மசோதா கொண்டு வர முடிவு!

அண்ணன் அம்பேதகரை இந்திய மக்கள் பி.ஆர்.அம்பேத்கர் என்றுதான் அழைக்கிறார்கள். தனது குடும்ப பெயரான ‘பீம்ராவ் சக்பால் அம்பாவடேகர்’ என்ற பெயரை, ‘பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்’ என்று அம்பேத்கர் மாற்றிக் கொண்டதாக கூறப்படும் நிலையில் , அவர் பௌத்த மதத்தை தழுவிய பின்னர் இந்து மத அடையாளங்கள் ஒட்டிக் கொண்டிருப்பதை விரும்பவில்லை. பௌத்தம் தழுவிய பின்னர் அவரை அனைவரும் பி.ஆர். அம்பேத்கர் என்றே அழைத்து வரும் நிலையில்.
உத்தரபிரதேச அரசு அம்பேத்கரின் பெயரை அரசு ஆவணங்களில் மாற்றும் படி உத்தரவிட்டுள்ளது. டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் என்று திருத்தி அடையாளப்படுத்தும் படி உத்தரவிட்டுள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு உத்தரபிரதேச ஆளுநர் ராம் நாயக்தான் முதன் முதலாக அம்பேத்கரின் பெயரை மாற்ற வித்திட்டார். பிரதமருக்கும், உத்தரபிரதேச முதல்வருக்கும் கடிதம் எழுதிய அவர் அம்பேத்கரின் பெயரில் ராம்ஜி என்ற பெயரை சேர்க்க உத்தரவிட்டார்.
ஆனால் இந்த நடவடிக்கை தலித்துகளிடம் என்ன விதமான உணர்வுகளை உருவாக்கும் எனத் தெரியவில்லை. உத்தரபிரதேச அரசியல் அரங்கில் சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் நெருங்கும் நிலையில் தலித் மக்களை அரவணைத்துக் கொள்ளும் முயற்சியாகவோ,. அல்லது யாதவ் vs தலித் முரண்பாட்டை கூர்மைப்படுத்தி விடும் நோக்கமாகவோ இந்தமுயற்சி இருக்கலாம் என்று அரசியல் அரங்கில் கருதப்படுகிறது.

மூன்றாவது அணி: மம்தா முயற்சிக்கு துணை போகுமா திமுக!

பிரதமர் மோடி தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம்!

மே 12-ஆம் தேதி கர்நாடக மாநில தேர்தல்!

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி ஓய்.எஸ்.ஆர் எம்.பிக்கள் ராஜிநாமா?

காவிரி மேலாண்மை வாரியம் :திமுக அவசர செயற்குழு கூட்டம்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*