காவிரி :திணறி நிற்கும் தமிழக அரசு!

நடுக்காட்டுராஜா விடியோ மறைக்கப்பட்ட உண்மைகள்!

அம்பேதகரின் பெயரை ‘கர்வாப்ஸி’ செய்து மாற்றிய பாஜக அரசு!

ஸ்டாலினை ஆளுநர் சந்தித்தன் பின்னணி என்ன?

குக்கர் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை!

நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தகுதி நீக்க மசோதா கொண்டு வர முடிவு!

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக ஆளும் அதிமுக அரசு அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. உச்சநீதிமன்றத்தின் கெடு நாளைக்குள் முடிவடையும் நிலையில் தமிழக அரசு என்ன செய்வதென்று தெரியாமல் திணறி வருகிறது. ஜெயலலிதா மரணத்தின் பின்னர் மத்திய அரசு நடத்திய ரெய்டுகளால் ஆடிப் போயிருக்கும் அதிமுக அரசு காவிரி விவகாரம் மட்டுமல்ல எந்த ஒரு தமிழக நலன் சார்ந்த விஷயங்களிலும் ஒரு தெளிவான முடிவெடுக்க முடியாமல் திணறி வருகிறது.
இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி, துணைமுதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார், துரைக்கண்ணு, தங்கமணி, காமராஜ், திண்டுக்கல் சீனிவாசன், ககன் தீப் சிங் பேடி அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் என பலரும் கலந்து கொண்டார்கள்.
ஆனால், அதிகாரிகளுக்கும் சரி அமைச்சர்களுக்கும் சரி என்ன செய்வது என்பது பற்றி எதுவும் தெரியவில்லை. அனைத்துக்கட்சி கூட்டத்தின் முடிவு அடிப்படையில் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டது. மீண்டும் நேரம் கேட்பது என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது.காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எப்படி அழுத்தம் கொடுப்பது என்று கருத்து கேட்கப்பட்டது. மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரலாமா என்றும் விவாதிக்கப்பட்டது.ஆனால் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனும், அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணனும் அது குறித்து தீவிரமாக ஆலோசிக்கலாம் என்று கூறியதாக தெரிகிறது.
இக்கூட்டத்தின் பின்னர் முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் தனியாக ஆலோசித்த போது அவர்கள் இருவருக்குமே மோடி அரசை எதிர்த்து நிற்பதில் உள்ள பல்வேறு சிக்கல்கள் குறித்து பேசியதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் நான் அவசரமாக மதுரைக்குச் செல்கிறேன் என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் கிளம்பிச் செல்ல கூட்டம் எந்த முடிவும் எடுக்காமல் ஒத்திப் போடப்பட்டது.
நாளை மறு நாள் மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தாலும் அந்த மனுவையே உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொள்ளாது. காரணம் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு நீதிமன்றத்தை நாடியுள்ளது.நீதிமன்றம் கூறியுள்ளபடி ‘ஸ்கீம்’ என்பதன் பொருளின் படி என்ன திட்டம் வகுக்கலாம் என்பதாக மத்திய அரசு முடிவெடுக்கத்தான் ஆலோசனை கேட்டுள்ளது என்று மத்திய அரசு வாதிடும் என்பதால் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தாலும் அதுவும் செல்லாது என்பதால் காவிரி விவகாரத்தில் தமிழக அரசு முழுமையாக தோல்வியடைந்து நிற்பதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*