அதிமுக எம்.பி ராஜிநாமா செய்யப்போவதாக அறிவிப்பு!

தீர்மானங்களோடு திமுக செயற்குழு:எதிர்பார்ப்பை ஈடேற்றுகிறதா திமுக?

காவிரி துரோகம் :ஸ்டாலின்!
காவிரி :திணறி நிற்கும் தமிழக அரசு!

நடுக்காட்டுராஜா விடியோ மறைக்கப்பட்ட உண்மைகள்!

அம்பேதகரின் பெயரை ‘கர்வாப்ஸி’ செய்து மாற்றிய பாஜக அரசு!

ஸ்டாலினை ஆளுநர் சந்தித்தன் பின்னணி என்ன?

குக்கர் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை!

நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தகுதி நீக்க மசோதா கொண்டு வர முடிவு!

தமிழகத்தில் ஆளும் அதிமுக காவிரி மேலாண்மைவாரிய விவகாரத்தில் நாடகங்களை நடத்திக் கொண்டிருக்க அதிமுக எம்.பி முத்துக்கருப்பன்  ராஜிநாமா  செய்யப் போவதாக அறிவித்துள்ளார். காவிரிமேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் கெடு முடிந்து விட்டது.  “பிரதமர் மோடி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பார்” என்று கடைசி வரை சொல்லிக் கொண்டிருந்த அதிமுகவினர் இப்போது ஏப்ரம் 2-ஆம் தேதி காவிரி மேலாண்மைவாரியம் அமைக்காததை கண்டித்து உண்ணாவிரத நாடகங்களை அறிவித்துள்ளார்கள்.
அதிமுக எம்.பி நவநீதகிருஷ்ணன் மாநிலங்களவையில் “காவிரி மேலாண்மைவாரியம் அமைக்கா விட்டால் தற்கொலை செய்து கொள்வோம்” என அறிவித்தார்.   இந்நிலையில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் முத்துக்கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசும் போது:-
“காவிரி மேலாண்மைவாரியத்துக்காக எனது பதவியை  ராஜிநாமா செய்கிறேன். நாடாளுமன்ற அவைத்தலைவரிடம் ராஜிநாமா கடிதத்தைஅளிக்க உள்ளேன்.  விவசாயிகள் விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என்று அமித்ஷா மற்றும் மோடியிடம் கூறினேன். அது போல அதிமுக எம்.பிக்கள் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று என் கட்சி தலைமையிடம் வலியுறுத்தினேன்.  இப்போது ராஜிநமா செய்வது என் முடிவு. மக்களுக்காக நான் ராஜிநாமா செய்கிறேன்” என்றார் முத்துக்கருப்பன்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*