காவிரி நீர் உரிமை :புதுச்சேரி மக்களுக்கு துரோகம் இழைத்த கவர்னர் கிரன்பேடி!

’ஸ்கீம்’ என்பது காவிரி மேலாண்மை வாரியம் கிடையாது : கானலானது காவிரி-கைவிரித்த உச்சநீதிமன்றம்!

அதிமுக எம்.பி முத்துக்கருப்பன் ராஜிநாமா நாடகமா?

”என் தொலைபேசியை அணைத்து விட்டேன்” ராஜிநாமா எம்.பி முத்துக்கருப்பன்!

தீக்குளித்த மதிமுக நிர்வாகி உயிரிழந்தார்!

பேராசிரியர் பாத்திமா பாபுவை கைது செய்ய திட்டம்!

காவிரி டெல்டா போராட்டம் கவனம் ஈர்த்த வேல்முருகன்!

ஸ்டாலின் போராட்டம்: செய்தி எழுதுவதில் உள்ள சங்கடம் என்ன?

நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் ஸ்கீம் ஒன்றை ஆறு வார காலத்திற்குள் உருவாக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு அவமதித்து விட்டதாக தமிழகம், புதுச்சேரி மாநிலங்கள் போர்க்கொடி தூக்கிய நிலையில், ஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை வாரியம்தான் என்பது தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் கோரிக்கை. ஆனால் மத்திய அரசோ ஸ்கீம் என்பதன் பொருள் என்ன என்று உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என தமிழகமும், புதுச்சேரியும் உச்சநீதிமன்றத்தை நாடப் போவதாக தெரிவித்தது. தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அவமதிப்பு வழக்கு உச்சநீதிமன்றத்தில் ஏப்ரல் 9-ஆம் தேதி விசாரணைக்கு வரும் நிலையில், புதுச்சேரி அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்றால் அதற்கு ஆளுநரின் அனுமதி பெற வேண்டும். மாநில அந்தஸ்து இல்லாத துணை நிலை பிரதேசங்களில் மத்திய அரசுக்கு எதிராக வழக்குத் தொடர ஆளுநர் அனுமதி வேண்டும் என்பது சட்ட விதி. இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மத்தியில் ஆளும் மோடி அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடிவு செய்து ஆளுநர் கிரன் பேடிக்கு கோப்பு அனுப்ப அதில் கையெழுத்திட மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் புதுச்சேரி அரசால் மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடியவில்லை.ஆளுநரின் இந்த செயலை கண்டித்து அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டங்களை நடத்தி வருகின்றன.
#Tamilnadunews #Tamilnews #CauveryManagementBoard #kiranbedi

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*