7 மாநிலங்களில் தலித் மக்கள் போராட்டம் :பணிந்தது மோடி அரசு!

Members of the Dalit or "untouchable" community shout slogans during a protest in the northern Indian city of Amritsar May 25, 2009. Thousands of protesters took to the streets in the Indian state of Punjab on Monday after an attack in a Sikh temple in Austria, torching a train, vehicles and shops, police said. REUTERS/Munish Sharma (INDIA RELIGION CONFLICT POLITICS) - GM1E55P19E101

காவிரி நீர் உரிமை :புதுச்சேரி மக்களுக்கு துரோகம் இழைத்த கவர்னர் கிரன்பேடி!

’ஸ்கீம்’ என்பது காவிரி மேலாண்மை வாரியம் கிடையாது : கானலானது காவிரி-கைவிரித்த உச்சநீதிமன்றம்!

அதிமுக எம்.பி முத்துக்கருப்பன் ராஜிநாமா நாடகமா?

தலித் மக்களை பாதுகாக்கும் விதமாக கொண்டு வரப்பட்ட வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்த உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக 7 மாநிலங்களில் பெரும் கலவரங்கள் வெடித்துள்ளன. இதுவரை ஐந்து பேர் பலியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில், ஆளும் பாஜக பிரதமர் மோடி அரசு அச்சமடைந்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த திருத்தத்தை திரும்பப் பெற சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
கடந்த மார்ச் 2-ஆம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பொன்றில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்த உடன் கைது செய்யும் நடைமுறைக்கு தடை விதித்ததோடு, அரசு ஊழியர்களை இச்சட்டத்தின் கீழ் கைது செய்யவும் கட்டுப்பாடுகளை விதித்ததோடு, இந்த வழக்கில் கைது செய்யப்படுகிறவர்கள் விரைந்து ஜாமீன் பெறும் வகையிலும் திருத்தங்களை கொண்டு வந்தனர்.
இது தலித் மக்களை பாதுகாக்கும் விதமாக கொண்டு வரப்பட்ட வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் நோக்கத்தையே சிதைக்கிறது என்று குஜராத்தில் சில நாட்களுக்கு முன்பே தலித் மக்கள் போராடத் துவங்கி விட்டார்கள். இந்நிலையில், இன்று இந்திய அளவிலான பந்த் போராட்டத்திற்கு தலித் அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன. பஞ்சாப் , பிஹார், ஹரியானா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மத்தியபிரதேசம், உத்தர்காண்ட் ஆகிய மாநிலங்கள் பந்த் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. ரயில் தண்டவாளங்கள் போராடும் மக்களால் அகழ்ந்து வீசப்பட்டது. பேருந்துகள் எரிக்கப்பட்டதால் இயல்பு வாழ்க்கை முழுக்க துண்டிக்கப்பட்டு பதட்டம் நிலவுகிறது. கர்நாடக மாநில தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அமித்ஷா தனது கர்நாடக மாநில தேர்தல் பயணத்தை ஒத்தி வைத்திருக்கிறார். தலித் மக்களின் இந்த போராட்டம் பாஜகவுக்கு எதிரான போராட்டமாக மாறி உள்ளதால் இதை எப்படி சமாளிப்பது என்பது தெரியாமல் பாஜக திணறி வருகிறது. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ள மத்திய அரசு. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் உச்சநீதிமன்றம் கொண்டு வந்த திருத்தங்களை திரும்பப் பெற வேண்டும் எனக் கோரியுள்ளது.

”என் தொலைபேசியை அணைத்து விட்டேன்” ராஜிநாமா எம்.பி முத்துக்கருப்பன்!

தீக்குளித்த மதிமுக நிர்வாகி உயிரிழந்தார்!

பேராசிரியர் பாத்திமா பாபுவை கைது செய்ய திட்டம்!

காவிரி டெல்டா போராட்டம் கவனம் ஈர்த்த வேல்முருகன்!

ஸ்டாலின் போராட்டம்: செய்தி எழுதுவதில் உள்ள சங்கடம் என்ன?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*