தாய் கண்ணெதிரில் இளைஞரை கட்டி வைத்து நொறுக்கிய டிராபிக் போலீஸ்:video


இப்போதெல்லாம் தவறிழைக்கும் மக்களுக்கு கொடூரமான தண்டனைகளை போலீசாரே வழங்குவதில் கை தேர்ந்தவர்கள் ஆகி விட்டார்கள். ஹெல்மெட் போடாமல் சென்ற திருச்சி தம்பதியை மிதித்தே கொன்ற தமிழக போக்குவரத்து காவல்துறை காவலர் கைது செய்யப்பட்டார். சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் கார் டிரைவரை பொது மக்கள் முன்னிலையில் தாக்கிய போலீசை கண்டித்து தீக்குளித்து டிரைவர் இறந்த நிலையில், சென்னை தி.நகரில் பிரகாஷ் என்ற இளைஞரை சில போக்குவரத்து காவலர்கள் சூழ்ந்து நின்று அவரது தாயின் கண் முன்னே தாக்கிய கொடூரமான விடியோ வைரலாகி வருகிறது.
ஒரு காவலர் அந்த இளைஞரை மின்கம்பத்தோடு இறுக்கிப் பிடித்துக் கொள்ள இன்னொரு காவலர் அந்த இளைஞரின் விரல்களை முறிக்க முயல்கிறார். மகனுக்கு நடந்த இந்த கொடூரங்களை தாய் கதறித்துடித்தபடி வேடிக்கை பார்க்க அந்த பெண்ணை ஒரு பெண் காவலர் தடுத்துப் பிடிக்கிறார்.
ஹெல்மெட் அணியாமல் வந்தாலும், மோட்டார் வாகனச் சட்டத்தை மீறினாலோ அவர்களை தண்டிக்க சட்டமும் நீதிமன்றமும் இருக்கிறது. ஆனால் சட்டத்தை காக்க வெண்டிய காவலர்களே வித விதமான கொடூர தண்டனைகளை இப்போது வழங்கத் துவங்கி விட்டார்கள்.

பிரதமர் மோடியின் சென்னை பயணம் ரத்து?

காவிரி நீர் உரிமை :புதுச்சேரி மக்களுக்கு துரோகம் இழைத்த கவர்னர் கிரன்பேடி!

’ஸ்கீம்’ என்பது காவிரி மேலாண்மை வாரியம் கிடையாது : கானலானது காவிரி-கைவிரித்த உச்சநீதிமன்றம்!

அதிமுக எம்.பி முத்துக்கருப்பன் ராஜிநாமா நாடகமா?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*