வலுவிழந்தது வன்கொடுமை தடுப்புச் சட்டம்!

தாய் கண்ணெதிரில் இளைஞரை கட்டி வைத்து நொறுக்கிய டிராபிக் போலீஸ்:video

உண்டு உண்டு உண்ணாவிரதம் இருந்த அதிமுகவினர்!

பிரதமர் மோடியின் சென்னை பயணம் ரத்து?

காவிரி நீர் உரிமை :புதுச்சேரி மக்களுக்கு துரோகம் இழைத்த கவர்னர் கிரன்பேடி!

’ஸ்கீம்’ என்பது காவிரி மேலாண்மை வாரியம் கிடையாது : கானலானது காவிரி-கைவிரித்த உச்சநீதிமன்றம்!

அதிமுக எம்.பி முத்துக்கருப்பன் ராஜிநாமா நாடகமா?

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கொண்டு வந்த  திருத்தங்களை வாபஸ் பெற முடியாது எனக் கூறி மத்திய அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை தள்ளுபடி செய்துள்ளது உச்சநீதிமன்றம்.

நாடு சுதந்திரமடைந்து தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது என்று அரசியல் சாசனம் கூறினாலும், நடைமுறையில் வெவ்வேறு வடிவங்களில் தீண்டாமை  கொடுமைகளுக்கு தலித் மக்கள் உள்ளாகிறார்கள். இதனால் கடுமையான சட்டப்பிரிவுகளை உள்ளடக்கிய  எஸ்.சி, எஸ்.டி சட்டப்பிரிவு வேண்டும் என்ற கோரிக்கையை தலித் அமைப்புகள் முன் வைத்த நிலையில் 2013-ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசு வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் 18-வது பிரிவில் உரிய திருத்தங்களைக் கொண்டு வந்தது. தலித் ஒருவர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் கொடுத்தால் உடனடியாக கைது, அப்படி கைது செய்யப்பட்டவர் ஜாமீன் பெற முடியாது என கடினமான சட்டப்பிரிவுகள் அதில் சேர்க்கப்பட்டன.  நாடு முழுக்க பெரும்பான்மை தலித் மக்கள் வன்கொடுமைகளால் பாதிக்கப்படுவது யதார்த்தமாக இருந்த போதிலும், ஆங்கொன்றும் இங்கொன்றுமாக வன்கொடுமை தடுப்புச் சட்டம்  தவறாக பயன்படுத்தப்பட்ட முன்னுதாரணங்களும் உண்டு. தனிப்பட்ட பகை, அரசியல் காரணங்களுக்காக இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில்,மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.ஏஸ் அதிகாரியான சுபாஷ் காசிநாத் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது அவரும் கைது செய்யப்பட்டார். அவர் தன் மீது அரசியல் காரணங்களுக்காக வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டதாகக் கூறி உச்சநீதிமன்றத்தை நாடி இச்சட்டத்தில் திருத்தம் கோரினார்.

இந்த மனுமீது கடந்த 20-ஆம் தேதி தீர்ப்பளித்த நீதிபதிகள் ஆதர்ஷ் கோயல், தலைமையிலான அமர்வு:-

“வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் அரசு ஊழியர் மீது தொடுக்கப்படும் புகார் மீது உடனடி நடவடிக்கை கூடாது. டி.எஸ்.பி தலைமையில் விசாரணை நடத்தி அதன் பின்னர் முகாந்திரம்  இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம். மேல் அதிகாரி உத்தரவுடன் கைது செய்யலாம்” என்று உத்தரவிட்டது. இதையொட்டி நாடு முழுக்க பெரும் கலவரங்கள் வெடித்தன. 9 தலித்துக்கள் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டிருக்கும் நிலையில், உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்த மத்திய அரசு “நீதிபதிகள் திருத்தங்களை வாபஸ் பெற வேண்டும்” என்றது.

“இதை நிராகரித்த நீதிபதிகள் அப்பாவிகள் தண்டிக்கப்படக் கூடாது என்பதே எங்கள் நோக்கம். நாங்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்திற்கு எதிரானவர்கள் அல்ல என்றும் கலவரங்களில் ஈடுபடுகிறவர்கள் எங்கள் தீர்ப்பை வாசித்துப் பார்க்கட்டும்” என்றார்கள்.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் முதுகெலும்பாக இருந்த சட்டப்பிரிவை உச்சநீதிமன்றம் பலவீனப்படுத்தி விட்டதாக தலித் ஆர்வலர்கள் கருத்து  தெரிவித்து வருகிறார்கள்.

 

 

 

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*