அண்ணா பல்கலையில் கன்னட துணை வேந்தர்: தமிழர்கள் புறக்கணிக்கப்பட்ட அவலம்!

சல்மான்கான் குற்றவாளி நீதிமன்றம் தீர்ப்பு!

12-ஆம் கர்நாடகத்தில் பந்த் அறிவிப்பு!

ஸ்டாலின் தலைமையில் பல்லாயிரம் பேர் பேரணி முடங்கியது சென்னை!

வலுவிழந்தது வன்கொடுமை தடுப்புச் சட்டம்!

உண்டு உண்டு உண்ணாவிரதம் இருந்த அதிமுகவினர்!

தாய் கண்ணெதிரில் இளைஞரை கட்டி வைத்து நொறுக்கிய டிராபிக் போலீஸ்:video

இந்திய அளவில் புகழ் பெற்ற அண்ணா பல்கலைக்கழகத்தில் தகுதியுள்ள பலர் தமிழகத்தில் இருந்தும் அவர்களை புறக்கணித்து விட்டு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த எம்.கே. சூரப்பாவை நியமித்திருக்கிறார் ஆளுநர்.

கடந்த இரு ஆண்டுகளாக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தர் நியமிக்கப்பட முடியவில்லை. தமிழகத்தில் பலவீனமான அதிமுக அரசை பாஜக கட்டுப்படுத்தி வந்ததும். ஒரு துணைவேந்தரைக் கூட நியமிக்கும் வலுவோ, தெம்போ அதிமுக அரசுக்கு இல்லாமல் இருந்ததுமே இதற்கு காரணம். துணைவேந்தரை தெரிவு செய்வதற்கான குழு பரிந்துரைக்கும் பெயர்களை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நிராகரித்து வந்தார்.  இந்நிலையில் துணைவேந்தர் பதவிக்கு 3 பேரை   பரிந்துரைக்க ஏப்ரல் 30-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டு  அரசாணை  இன்று மாலை (05-04-2018) அன்று வெளியிடப்பட்ட அன்று இரவே கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சூரப்பாவை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக நியமித்து ஆளுநர் பன்வாரி லால் புரோகித் உத்தரவிட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த எம்.கே. சூரப்பா 150 ஆய்வுக்கட்டுரைகள் எழுதியிருப்பதாக கூறப்படுகிறது. சூரப்பா 3 ஆண்டுகள் பதவிக்காலத்தில் இருப்பார்.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*