அழுத்தங்களுக்கு பணிய வேண்டாம் :மோடிக்கு சித்தராமையா கடிதம்!

சல்மான்கான் குற்றவாளி நீதிமன்றம் தீர்ப்பு!

12-ஆம் கர்நாடகத்தில் பந்த் அறிவிப்பு!

ஸ்டாலின் தலைமையில் பல்லாயிரம் பேர் பேரணி முடங்கியது சென்னை!

வலுவிழந்தது வன்கொடுமை தடுப்புச் சட்டம்!

உண்டு உண்டு உண்ணாவிரதம் இருந்த அதிமுகவினர்!

தாய் கண்ணெதிரில் இளைஞரை கட்டி வைத்து நொறுக்கிய டிராபிக் போலீஸ்:video
காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல் படுத்தும் படி பிரதமர் மோடிக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக தமிழகம், கர்நாடக மாநிலங்களில் பெரும் கொந்தளிப்பு எழுந்துள்ளது. தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி வரலாறு காணாத போராட்டங்கள் நடந்து வருகிறது. இன்று திமுக தலைமையில் எதிர்க்கட்சிகள் முழு நாள் அடைப்பு போராட்டத்தை நடத்தியது.
இந்நிலையில். கர்நாடக முதல்வர் சித்தராமையா பிரதமர் மோடிக்கு இது தொடர்பாக எழுதியுள்ள கடிதத்தில், “தமிழகத்தின் அழுத்தங்களுக்கு நீங்கள் பணிய வேண்டாம். காவிரி பிரச்சனையில் ஒரு திட்டத்தை ஏற்படுத்த உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. நதி நீரை பங்கிட்டுக் கொள்ள ஒரு அமைப்பை உருவாக்குமாறு அத்தீர்ப்பில் உள்ளது. மத்திய அரசு அந்த தீர்ப்பை உடனே செயல்படுத்த வேண்டும்” எனக் கோரியுள்ளார்.
கர்நாடகமாநிலத்தில் உள்ள பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் இதில் ஒருமித்த கருத்துடன் செயல்படுகின்றன.

#Tamilnews #Tamilnadunews #TNBandh #CauveryManagementBoard

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*