சல்மான்கான் குற்றவாளி நீதிமன்றம் தீர்ப்பு!

12-ஆம் கர்நாடகத்தில் பந்த் அறிவிப்பு!

ஸ்டாலின் தலைமையில் பல்லாயிரம் பேர் பேரணி முடங்கியது சென்னை!

வலுவிழந்தது வன்கொடுமை தடுப்புச் சட்டம்!

உண்டு உண்டு உண்ணாவிரதம் இருந்த அதிமுகவினர்!

தாய் கண்ணெதிரில் இளைஞரை கட்டி வைத்து நொறுக்கிய டிராபிக் போலீஸ்:video

20 ஆண்டுகளுக்கு முன்னர் மான் வேட்டையில் ஈடுபட்ட நடிகர் சல்மான்கான் குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.1998-ஆம் ஆண்டு தான் நடித்து வந்த இந்தி படமொன்றின் படப்பிற்காக ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூருக்குச் சென்ற நடிகர் சல்மான்கான் மான் வேட்டையில் ஈடுபட்டதாக உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அரிய வகை மானை வேட்டையாடிய சல்மான்கான் மீதான வழக்கு கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வரும் நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு  தீர்ப்பளித்த நீதிமன்றம் சல்மான்கானை குற்றாவாளி என அறிவித்தது. ஆனால் அதே நேரம் அவரோடு குற்றம் சுமத்தப்பட்ட யீப் அலிகான், நடிகைகள் தபு, நீலம், சோனாலி பிந்தரே ஆகியோர் விடுவிக்கப்பட்டார்கள். சல்மான்கானுக்கு தண்டனை விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*