ஸ்டாலின் தலைமையில் பல்லாயிரம் பேர் பேரணி முடங்கியது சென்னை!

வலுவிழந்தது வன்கொடுமை தடுப்புச் சட்டம்!

உண்டு உண்டு உண்ணாவிரதம் இருந்த அதிமுகவினர்!

தாய் கண்ணெதிரில் இளைஞரை கட்டி வைத்து நொறுக்கிய டிராபிக் போலீஸ்:video

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி திமுக தலைமையிலான அனைத்துக் கட்சி போராட்டங்களால் சென்னை மாநகரம் முடங்கியது. போலீசாரின் எதிர்ப்பார்ப்புகள் பொய்த்து அனைத்துக் கட்சி தலைவர்களும் ஸ்டாலின் தலைமையில் திரண்டு அண்ணா சாலை சிம்சன் அருகே கூடினார்கள்.அவர்கள் கூடிய அதே நேரத்தில் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த பல்லாயிரம் தொண்டர்களும் திரண்டனர். இதனால் போலீசார் செய்வதறியாது திணறினார்கள். வழக்கமாக காலை 11 மணிக்கு போராட்டங்கள் முடிந்து விடும் நிலையில் இன்று பந்த் அறிவிக்கப்பட்ட நிலையில் வாகனங்களை இயக்கியே ஆக வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவையும், கவர்னரின் உத்தரவையும் நிறைவேற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்த நிலையில், சில பேருந்துகள் ஓட்டின. இது எதிர்க்கட்சிகளை கடுப்பாக்க அனைத்து தலைவர்களும் வீதிக்கு வந்தனர்.

சிம்சனில்  இருந்து  கடற்கரை சாலை நோக்கி தலைவர்கள் ஊர்வலமாக கிளம்ப அவர்களை இரும்புக் கம்பிகள் போட்டு போலீசார் தடுக்க முயல அதை தூக்கி எரிந்து விட்டு பேரணி தொடர்ந்தது. சில இடங்களில் போலீசாருக்கும் திமுக தொண்டர்களுக்கும் மோதல் நடந்த நிலையில், ஸ்டாலின் தடுத்து மறிக்கப்பட்டுள்ளார்.

இந்த போராட்டங்களால் சென்னை முடக்கப்பட்டுள்ள நிலையில் அண்ணா சாலை,காமராஜர் சாலை, வாலஜா சாலை உள்ளிட்ட பல இடங்களில் போக்குவரத்து  முடங்கியது.

பல தொண்டர்கள் போலீஸ் தாக்குதலில் காயமடைந்திருக்கும் நிலயில், தொண்டர்களும் காயமடைந்திருக்கிறார்கள்.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*