12-ஆம் கர்நாடகத்தில் பந்த் அறிவிப்பு!

ஸ்டாலின் தலைமையில் பல்லாயிரம் பேர் பேரணி முடங்கியது சென்னை!

வலுவிழந்தது வன்கொடுமை தடுப்புச் சட்டம்!

உண்டு உண்டு உண்ணாவிரதம் இருந்த அதிமுகவினர்!

தாய் கண்ணெதிரில் இளைஞரை கட்டி வைத்து நொறுக்கிய டிராபிக் போலீஸ்:video

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது  எனக் கூறி கன்னட அமைப்புகள் வருகிற 12-ஆம்  தேதி கர்நாடக மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல் படுத்தாத மத்திய  அரசை கண்டித்தும், செயல்படாமல் முடங்கிக் கிடக்கும் மாநில அரசை கண்டித்தும் தமிழகத்தில் பந்த் போராட்டத்தை இன்று திமுக தலைமையிலான எதிர்க்கட்சிகள் நடத்துகின்றன. இந்த போராட்டம் பெருமளவு  வெற்றி பெற்றுள்ள நிலையில் , கர்நாடக மாநிலத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என்று வருகிற 12-ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காது என்பது மோடி அரசு  தெள்ளத் தெளிவாக நிரூபித்து உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடுவும் முடிந்து விட்ட நிலையில், இப்படி ஒரு விநோதமான போராட்டத்தை கன்னட இன வெறி அமைப்புகள் அறிவித்துள்ளது. இந்த போராட்டத்தை பாஜக அதரிக்கிறது.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*