தமிழக பல்கலையில் கர்நாடக சூரப்பா:பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்!

துணைவேந்தர் பதவி: புஷ்பவனம் குப்புசாமி சாதியால் வீழ்த்தப்பட்ட கதை..!

அண்ணா பல்கலையில் கன்னட துணை வேந்தர்: தமிழர்கள் புறக்கணிக்கப்பட்ட அவலம்!

சல்மான்கான் குற்றவாளி நீதிமன்றம் தீர்ப்பு!

12-ஆம் கர்நாடகத்தில் பந்த் அறிவிப்பு!

ஸ்டாலின் தலைமையில் பல்லாயிரம் பேர் பேரணி முடங்கியது சென்னை!

அடிப்படையாக சில விஷயங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆளும் மத்திய அரசால் நடத்தப்படும் வருமான வரி ரெய்டுகள், கைதுகள் என அனைத்தும் எதிர்க்கட்சியினரை நோக்கியதாக இருக்கிறது. அரசியல் உள் நோக்கம் கொண்டதாக இருக்கிறது. மோடி ஆட்சிக்கு வந்த இந்த நான்கு ஆண்டுகளில் இந்தியா முழுக்க ஊழல் வழக்குகளில் சிறை சென்றவர்கள், ரெய்டுக்கு உள்ளானவர்கள் என இவை அனைத்தும் அரசியல் நோக்கங்களுக்கு பயன்பட்டிருப்பது அமைச்சர் விஜயபாஸ்கர் ரெய்ட் முதல் பீகார் வரை உதாரணம் சொல்ல முடியும்.
இந்தியாவிலேயே கல்வியில் முதல் தரமான மாநிலமாக தமிழகம் திகழ நமது பல்கலைக்கழகங்களும் அதில் பணியாற்றும் திறமை மிக்க தமிழகத்தைச் சேர்ந்த துணைவேந்தர்களும் ஆசியர்களுமே காரணம். இந்தியாவில் சிறந்த பல்கலைக்கழகங்களை, கல்லூரிகளை பட்டியலிட்டால் தமிழகம் முதல் பத்து இடங்களில் இருக்கும் கடந்த 20 ஆண்டுகளாக நம் முன்னேற்றத்திற்கு கிடைத்த பரிசு!
நிற்க,
சேகர் ரெட்டி, ராமமோகன்ராவ், விஜயபாஸ்கர் வீடுகளில் விட்ட ரெய்டோடு அவர்கள் சரண்டர் ஆன நிலையில், துணைவேந்தர் நியமனங்களில் முறைகேடுகள் உள்ளது என்ற குற்றச்சாட்டு பொதுவாக தமிழகத்தில் இருந்த நிலையில், பன்வாரி லால் புரோகித் கவர்னராக வந்த பிறகு துணைவேந்தர் நியமனங்களில் ஊழல் எனும் விவகாரத்தை ஊடகங்கள் பெரிதாக பிரச்சாரப்படுத்தின. சில, பல கைதுகள், நடந்தது. சில நாட்களுக்கு முன்னர் அண்ணா பல்கலைக்கழகத்தில் அதிகாரிகள் சோதனை என்று செய்தி .கடந்த ஒரு வருடங்களாக பல்கலைக்கழக நியமனங்களை நியமிக்கா விடாமல் சிந்தனை மட்டத்தில்,கருத்தியல் ரீதியாக இந்தியாவில் தரமான கல்வியை கொடுக்கும் தமிழக பல்கலைக்கழகங்கள் ஊழல் மயமானவை, தகுதி குறைவான நபர்கள் இருப்பதால்தான் ஊழல் நடக்கிறது என்ற பொய்யை பரப்பி விட்டு, தங்கள் ஆட்களை உள்ளே நுழைப்பது இதுதான் அவர்களின் தந்திரம்.
புஷ்பவனம் குப்பு சாமி கவின்கலை பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தராக வேண்டிய இடத்தில் பிரமிளா குருமூர்த்தியை கொண்டு வந்தது, அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்திற்கு தகுதியுள்ளபலர் தமிழகத்தில் இருந்தும் சாஸ்திரியை கொண்டு வந்ததும், இப்போது அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கர்நாடகவைச் சேர்ந்த எம்.கே. சூரப்பாவை கொண்டு வந்ததும் இப்படித்தான்!
சூரப்பா திட்டமிட்டு பரப்படும் வதந்தி!
பாஜகவின் நியமனங்கள் எப்படி இருக்கும் என்பது நாம் சொல்லித் தெரியவேண்டியதில்லை. சூரப்பா பற்றிய முதல் செய்தியே அவர் 150 ஆய்வு பேப்பர்களை சமர்பித்துள்ளார் என்பதுதான். ஆனால் தமிழகத்தில் தகுதியான நபர்கள் துணைவேந்தர் பதவிக்கு இருந்தும் அவர்கள் வரவில்லை என்றால் 150 பேப்பர் சமர்பித்தவரை விட தமிழக பேராசிரியர்கள் மோசமா என்ற கேள்வி வருகிறது. ஆனால் உண்மை என்ன என்றால்?
சூரப்பா பற்றி 150 பேப்பர் சமர்ப்பித்தவர் என்று முந்திரிக்கொட்டை மாதிரி ஊடகங்களுக்கு தகவல் கொடுக்கும் கவர்னர் மாளிகை யாருக்கெல்லாம் பதவியை மறுதலித்தது என்பதை மறைப்பது ஏன்? இந்த பதவிக்கு கடந்த இரு ஆண்டுகளாக விண்ணப்பித்து இந்த பதவி கிடைக்காமல் போனவர்கள் யார்?
இந்த நியமனத்திற்கு முந்தைய தினம் கவர்னரை ஒபிஎஸ்- இபிஎஸ் குழு சந்தித்த போது என்ன பேச்சுவார்த்தை நடந்தது. சூரப்பாவை நியமிக்கப்போவது தொடர்பாக தகவல் இரு நாட்களுக்கு முன்பே ஊடகவியலாளர்களுக்கு கசிந்து விட்ட நிலையில், முதல்வருக்கோ துணை முதல்வருக்கோ தெரியவில்லையா?
ஒரு துணைவேந்தரைக் கூட நியமிக்கும் துணிச்சலோ, திராணியோ இல்லாத மோடியின் பொம்மை ஆட்சியாளர்கள் யாரை எல்லாம் துணைவேந்தராக்க பரிந்துரைத்தார்கள் என்பதைக் கூட சொல்வதில்லை. புஷ்பவனம் குப்புசாமி துணிந்து பேசியது போல இதில் தகுதியிருந்தும் வாய்ப்பு மறுக்கப்பட்ட தமிழக பேராசிரியர்கள் துணிந்து பேசினால்தான் உண்டு.

பாஜகவின்  அனைத்து விதமான நியமனங்களிலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இருப்பது இந்தியா முழுக்க வைக்கப்படும் குற்றச்சாட்டு. பல்கலைக்கழகங்களில் ஜோதிடத்தை போதிக்க வேண்டும் என்று பேசும் ஆர்.எஸ். எஸ் அதை தொடர்ந்து செய்து வருவதோடு தமிழகத்தின் தரமான கல்வியை பழாக்கி அதை அவர்களின் கட்டுப்பாட்டில் எடுக்கவுமே இந்த நியமனங்களை வேக வேகமாக  செய்து வருகிறது.

எது எப்படி என்றாலும் இது தமிழர்களின் தன்மானத்தின் மீது நடத்தப்படும் போர் சூரப்பாவை அனுமதித்தால் இனி பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட தமிழக மக்கள் அனைத்து உரிமைகளையும் ஒபிஎஸ்- இபிஎஸ் ஆட்சியில் இழந்து வருவது போல பல்கலைக்கழக நியமங்களிலும் இழப்பது உறுதி.
ஒபிஎஸ் -இபிஎஸ் குழுவினர் உடனடியாக பதவியை ராஜிநாமா செய்து விட்டுச் செல்வது நல்லது. இதே நிலை நீடிக்கும் என்றால் வெளியில் சுதந்திரமாக நடமாட முடியாத சூழல் அவர்களுக்கு உருவாகலாம் அப்படி ஒரு நிலையை அவர்களே உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*