’ஜெ’ சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பில் பாரபட்சம்: நீதிபதி அதிருப்தி!

பேராசிரியர் சாய்பாபா கவலைக்கிடம்:மனைவி கடிதம்!

தலித் பழங்குடியினருக்காக 9-ம் தேது நாடு தழுவிய போராட்டம்: காங் அறிவிப்பு!

தமிழக பல்கலையில் கர்நாடக சூரப்பா:பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்!

துணைவேந்தர் பதவி: புஷ்பவனம் குப்புசாமி சாதியால் வீழ்த்தப்பட்ட கதை..!

ஜெயலலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு பல மாதங்களாக நிலுவையில் இருந்த நிலையில், அவரது மரணத்திற்குப் பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜெயலலிதா மறைந்து விட்டதால் அவர் தண்டனை அடையவில்லை ஆனால் அவரை சொத்துக்குவிப்பு வழக்கின் குற்றவாளி என்றது உச்சநீதிமன்றம். அவரோடு வாழ்ந்த சசிகலா சிறைக்குச் சென்றார்.
இந்த தீர்ப்பு பொது தளத்தில் பல கேள்விகளை எழுப்பிய நிலையில், இப்போது நீதிபதி செலமேஸ்வர் இத்தீர்ப்பு பற்றி தன் அதிருப்தியை பதிவு செய்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் மீது எழுந்துள்ள சந்தேகங்கள் தொடர்பாக பேசிய அவர் :-
“எனக்கும் பல விதமான சந்தேகங்கள் உள்ளது. ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை விசாரித்த அமர்வு இளைய நீதிபதிகளைக் கொண்ட அமர்வு. அப்போதே நான் அதற்கு எதிர்ப்பை பதிவு செய்தேன். ஆனாலும் அந்த அமர்வுதான் வழக்கை விசாரித்தது. ஜெயலலிதா இறந்து ஒரு ஆண்டுக்கு பிறகுதான் இந்த தீர்ப்பு வந்தது. அதனால் பயன் எதுவும் இருக்கவில்லை. ஒரு வழக்கின் விசாரணைக்கு வழக்குகளை ஒதுக்கும் அதிகாரம் தலைமை நீதிபதிக்கு இருப்பதால் அந்த அதிகாரத்தை அவர் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும்.தன் சுய விருப்பதின் அடிப்படையில் வழக்குகளை ஒதுக்கினால் அது நீதித்துறையின் நம்பகத்தனமையை பலவீனப்படுத்தி விடும். நீதித்துறையில் எழும் பிரச்சனைகளையும் குறைகளையும் நிவர்த்தி செய்வது அவசியம். ஆனால் பாராளுமன்றத்தில் கண்டன தீர்மானம் கொண்டு வருவது சரியல்ல என்றும் கூறினார். வருகிற ஜூன் 22-ஆம் தேதியோடு நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற இருப்பதாகவும் அதன் பிறகு எந்த பதவியையும் அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்க்கவில்லை” என்றும் கூறினார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*