நடிகர்களின் மவுன போராட்டம் எனும் மோசடி போராட்டம்?

தலித் பழங்குடியினருக்காக 9-ம் தேது நாடு தழுவிய போராட்டம்: காங் அறிவிப்பு!

தமிழக பல்கலையில் கர்நாடக சூரப்பா:பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்!

துணைவேந்தர் பதவி: புஷ்பவனம் குப்புசாமி சாதியால் வீழ்த்தப்பட்ட கதை..!
ரெய்டுக்கு அஞ்சி மவுன போராட்டம் நடத்தி நாடகம் ஆடும் திரையுலகம்!
தென்னிந்திய நடிகர் சங்கம் என்னும் பெயரில் தமிழகத்தில் தொழிற்படும் நடிகர் சங்கம் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் நடத்தப்படுகிறது. யாருக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தோ, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதன் அவசியத்தை வலியுறுத்தியோ பேசும் வாய்ப்பு இல்லை. ஆனால் திரையுலகம் சார்ந்த பிரச்சனைகளுக்கும்,வரிவிலக்கு உள்ளிட்ட விவகாரங்களுக்கோ போராடும் திரையுலகம் மைக் வைத்து சத்தமாக பேசி போராடுவார்கள். ஆனால் பல கோடி தமிழ் மக்களின் வாழ்வாதாரப்பிரச்சனையிலும், தமிழகத்தின் உயிர்நாடியான விவசாயிகளின் வாழ்வாதாரப்பிரச்சனையிலும் யாரும் எதுவும் பேசாமல் மவுனப் போராட்டம் நடத்துகிறது திரையுலகம்.
ரஜினி, கமல், இளையராஜா, சத்யராஜ், நடிகர் விஜய் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ள இந்த போராட்டம் வேடிக்கையாகவும் கேலிப்பொருளாகவும் மாறியுள்ளது.கர்நாடக திரையுலகினர் தமிழக நடிகர் சங்கத்தின் போராட்டங்களை ஏளமானமாக பேசும் அளவுக்குத்தான் இவர்களின் யோக்கியதை இருக்கிறது. காவிரி நீர் விவகாரத்தில் வாய் திறந்து எதாவது பேசினால் ரெய்ட் நடக்கும் என்பதால் பயந்து போய் யாரும் எதுவும் பேசவேண்டாம் என்று முடிவெடுத்து போராடுவதாக கூறப்படுகிறது. அத்தோடு ரஜினி, கமல் இருவரும் அரசியலுக்கு வந்து விட்ட நிலையில், மேடையில் யாரும் எதாவது பேசி அரசியல் ரீதியான சர்ச்சைகளுக்கு அது வித்திட்டு விடக் கூடாது என்பதால் நடிகர் மவுனப் போராட்டம் நடத்துகிறது. இப்படி ஒரு மவுனப் போராட்டம் நடத்த மேடை போட்டு கூட வேண்டிய அவசியமே இல்லை. வீட்டில் இருந்த படி மவுனமாக இருந்து விட்டு நாங்கள் வீட்டிலேயே மவுனமாக இருந்தோம். போராட்டம் வெற்றி என்று சொன்னாலும் அதை நம்பும் சூழலில்தான் அப்பாவி விவசாயிகள் உள்ளார்கள்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*