குழந்தைகள் நட்ட மரத்தை பிடுங்கி எறிந்து சேவையாற்றிய காவலர்:video

மரம் நடுவோம், பசுமை காப்போம் என்று பல கோடி ரூபாய் செலவு செய்து அரசு விளம்பரம் செய்கிறது. பிரதமர் முதல் லோக்கல் எம்.எல்.ஏ வரை அரசியல்வாதிகள் வரை அதிக பட்சம் மக்களுக்கு ஆற்றும் சேவையே மரம் நடுவதுதான். இந்த மாதிரி மரம் நடும் விழாக்களில் காவல்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டு நற்பெயர் சம்பாதிப்பது உண்டு. ஆனால் பள்ளிக்குழந்தைகள் நட்டு வளர்த்த மரங்களை பிடுங்கி எரிந்து பசுமை சேவை செய்துள்ளார் சென்னிமலை அருகில் உள்ள வெள்ளோடு காவல் நிலைய எஸ்.சி. லோகநாதன்.
சென்னிமலை ஒன்றியம் சாணார் பாளையம் ஊர் பொது மக்கள் மற்றும் பள்ளிக்குழந்தைகள் சாலையோரமாகவும், பொது இடத்திலும் நட்ட மரங்கள் இடைஞ்சலாக இருக்கிறது என்று கூறி வெள்ளோடு காவல் நிலைய S.I லோகநாதன் மரங்களை பிடுங்கி எரிகிறார். அப்பகுதி பெண்கள் இணைந்து “குழந்தைகள் நட்ட மரத்தை ஏன் பிடுங்கி எறிகின்றீர்கள்?” எனக் கேட்க அவரோ அலட்சியாமாக பதில் சொல்கிறார்.
ரியல் எஸ்டேட் அதிபர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு காவல்துறை மரங்களை பிடுங்கி எரிந்துள்ளதாக கூறப்படுகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*