மோடிக்கு எதிர்ப்பு:12-ஆம் தேதி வீடுகளில் கருப்புக்கொடி!

நடிகர்களின் மவுன போராட்டம் எனும் மோசடி போராட்டம்?

தலித் பழங்குடியினருக்காக 9-ம் தேது நாடு தழுவிய போராட்டம்: காங் அறிவிப்பு!

தமிழக பல்கலையில் கர்நாடக சூரப்பா:பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்!

துணைவேந்தர் பதவி: புஷ்பவனம் குப்புசாமி சாதியால் வீழ்த்தப்பட்ட கதை..!
இராணுவ தளவாட கண்காட்சிக்காக 12-ஆம் தேதி சென்னை வரும் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்புக் கொடி ஏற்ற வேண்டும் என்று அனைத்துக் கட்சி தலைவர்கள் அறிவித்துள்ளார்கள்.
திமுக,மதிமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட் கட்சி, திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் , மனித நேய மக்கள் கட்சி என அனைத்துக் கட்சியினரும் இணைந்து நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்துக் கட்சி தலைவர்களைச் சந்திக்காத பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டுவது என முடிவெடுக்கப்பட்டது.இது தொடர்பாக திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
“உச்சநீதிமன்றத் தீர்ப்பினை மதித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காது, காலம் தாழ்த்தியது மட்டுமல்லாமல், தீர்ப்பையே புறக்கணித்திருப்பதைக் கண்டித்து பிரதமர் நரேந்திரமோடிக்கு கருப்பு கொடி காட்டப்படும் என்று கடந்த 1-ந்தேதி அன்று தி.மு.க. வின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்த தீர்மானத்தின் அடிப்படையில், வருகிற 12-ந்தேதி அன்று சென்னை வரவிருக் கும் பிரதமருக்கு அனைத்துக் கட்சித் தோழர்களும் கருப்பு கொடி காட்டுவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கடந்த 6 வருடங்களாக ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்படாததால், விவசாயம் பாழ்பட்டுப்போய் விவசாயிகள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகி, தமிழ்நாட்டில் காவிரி நீரை ஆதாரமாக நம்பியிருக்கும் 13-க்கும் மேற்பட்ட கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் பாதிக்கப்பட்டு, பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களின் மக்களுக்கு குடிதண்ணீர் பிரச்சினை பெரிதாக உருவாகும் சூழ்நிலையில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல், 3 மாத கால அவகாசம் கேட்டு, தீர்ப்பை கிடப்பில் போடுவதற்கான சந்தேகங்களை எழுப்பிவிட்டு தமிழ்நாட்டிற்கு வருகிறார் பிரதமர்.

இந்த சர்வாதிகாரக் கொடுமையைத் தட்டிக்கேட்க துணிச்சல் இல்லாமல், பதவி ஒன்றே வாழ்க்கைப் பயன் என்று தூங்கிக் கொண்டிருக்கிறது தமிழ்நாட்டில் உள்ள அ.தி.மு.க. அரசு.

தமிழகத்தின் காவிரி உரிமை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ள இந்த நெருக்கடியான நேரத்தில், தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் தங்களது ஆழமான அதிருப்தியையும் ஒன்றுபட்ட எதிர்ப்பையும் பிரதமருக்குத் தெளிவுபட உணர்த்திடும் வண்ணம் தங்கள் இல்லங்களில் கருப்பு கொடி ஏற்றியும், ஒவ்வொருவரும் கருப்புச்சட்டை அல்லது கருப்பு பேட்ஜ் அணிந்தும் தமிழ்நாட்டின் காவிரி உரிமையை என்ன விலை கொடுத்தேனும் மீட்கும் இந்த உறுதியான போராட்டத்தில் முழு மூச்சுடன் பங்கேற்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

நம் உணர்வுகளை மத்திய பா.ஜ.க. அரசுக்கு முழுமையாக வெளிப்படுத்திட வேண்டிய மிக முக்கியமான தருணம் இது என்பதை உணர்ந்து கட்சி வேறுபாடு பாராமல் அனைத்துத் தரப்பு மக்களும் உத்வேகத்துடன் இந்த கருப்பு கொடி போராட்டத்தில் தவறாமல் பங்கேற்றிட வேண்டும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*