’ஸ்கீம்” என்பதே தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிதான்!

காவிரி நதி நீரை  பங்கீடு செய்து கொள்வதற்கான வரைவுத்திட்டத்தை  சமர்பிக்குமாறு கூறிய உச்சநீதிமன்றம் வழக்கை மே-3 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது. இதனால் மிகப்பெரிய பின்னடைவை தமிழகம் சந்தித்திருக்கிறது.
தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உட்பட 4 வழக்குகளை ஒன்றாக விசாரித்த உச்சநீதிமன்றம் மாதம்தோறும் திறந்து விட வேண்டிய தண்ணீரை கர்நாடக மாநிலம் திறந்து விட வேண்டும். காவிரி நடுவர் மன்றம் காவிரி மேலாண்மை வாரியம் என்று தெரிவித்த நிலையில், நாங்கள் எங்கள் தீர்ப்பில் செயல் திட்டம் என்று குறிப்பிட்டோம்.  வரைவு செயல் திட்டத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல்  செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் அதற்கான காலக்கெடு எதனையும் கூறவில்லை.அது போல ஸ்கீம் என்றால் என்ன என்று இப்போது எதுவும் கூறமுடியாது. வரைவு அறிக்கைக்குப் பின்னர். அதை நான்கு மாநிலங்களின் முன்னாலும் வைத்து ஆலோசித்து விட்டு பின்னர் முடிவெடுப்போம்” என்ற நீதிமன்றம் வழக்கை ஒத்தி வைத்தது.\
ஆரம்பம் முதலே இந்த வழக்கில் குழப்பமான தீர்ப்பை  வழங்கி வரும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள்தான் தமிழகத்திற்கு மிகப்பெரிய பின்னடைவை உருவாக்கி உள்ளது. ஸ்கீம் என்பதே தமிழகத்திற்கு தண்ணீர் தராமல் இழுத்தடிப்பதற்காக ஒரு இடைக்கால வார்த்தை எனும் நிலையில், மே-12 ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் தேர்தல் நடக்கும் நிலையில் உச்சநீதிமன்றம் பாஜகவின் நலன்களுக்காக வழக்கை இழுத்தடித்து வருகிறது என்ற குற்றச்சாட்டு பரவலாக முன் வைக்கப்படுகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*