அண்ணாசாலையில் அதிரடிப்படையினர் தடியடி!

முடக்கப்பட்டது அண்ணாசாலை ஐ.பி.எல் போட்டி தோல்வி!

பாரதிராஜா,கவுதமன்,வெற்றிமாறன், சீமான் கைது தடியடி!

ஸ்டெர்லைட் ஆலையில் உரிமத்தை புதுப்பிக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மறுப்பு:பின்னணி!

குழந்தைகள் நட்ட மரத்தை பிடுங்கி எறிந்து சேவையாற்றிய காவலர்:video

சி.பி.ஐ இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்கள்!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அண்ணா சாலையில் போராடிய ஆயிரக்கணக்கானவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்து வருகிறார்கள். போராடும் சக்திகளை அச்சுறுத்தும் வகையில் தடியடி நடத்தியதோடு அங்கிருக்கும் கடைகளை போலீசாரே முடி வருகிறார்கள்.
அண்ணாசாலையை ஒட்டியிருக்கும் ரிச் தெருவில் இருக்கும் அனைத்து கடைகளையும் அடைக்குமாறு போலிசார் மிரட்டி வருவதால் கடைகள் வேக வேகமாக அடைக்கப்படுகின்றன. போராட்டத்தில் பங்கேற்ற பாரதிராஜா, சீமான், இயக்குநர் கவுதமன், இயக்குநர் சேகர், வெற்றிமாறன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை கைது செய்த போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்திய சிறிது நேரத்தில் போலீசார் தடியடி நடத்தத் துவங்கினார்கள்.
அண்ணாசாலையை நோக்கி ஆயிரக்கணாக்கானவர்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில்,ஒரு பக்கம் போராட்டம் இன்னும் நடந்து வருகிறது. இன்னும் பல ஆயிரம் இளைஞர்களும், மாணவர்களும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிரடிப்படையினரும், துணை ராணுவப்படையும் மேலதிகமாக குவித்துள்ளது.

மோடி வருகை: தமிழகம் போர்கோலம் பூணட்டும்-வைகோ அறிக்கை

தலித் மாணவர் அட்மிஷனுக்கு லஞ்சம்:வித்யாலயா முதல்வர் கைது!

ஹாங்காங்கில் நிரவ் மோடி:இந்தியா கொண்டு வருவதில் சிக்கல்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*