தலித் மாணவர் அட்மிஷனுக்கு லஞ்சம்:வித்யாலயா முதல்வர் கைது!

ஹாங்காங்கில் நிரவ் மோடி:இந்தியா கொண்டு வருவதில் சிக்கல்!

குழந்தைகள் நட்ட மரத்தை பிடுங்கி எறிந்து சேவையாற்றிய காவலர்:video

சி.பி.ஐ இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்கள்!

மோடி வருகை: தமிழகம் போர்கோலம் பூணட்டும்-வைகோ அறிக்கை
மத்திய அரசுக்கு சொந்தமான கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தரமானவை என்றும் ஒரு நம்பிக்கை மக்கள் மத்தியில் உள்ள நிலையில். தலித் மாணவர் ஒருவரை பள்ளியில் சேர்க்க ஒரு லட்சம் லஞ்சம் பெற்ற பள்ளி முதல்வர் சி.பி.ஐ. போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அசோக்நகரில் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆனந்தன் என்பவர் முதல்வராக இருக்கிறார். உயர்வர்க்க குழந்தைகள் கல்வி பயிலும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தலித் பெற்றோர் தங்கள் மகனை படிக்க வைக்க விரும்பினார்கள். கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி ஒன்றாம் வகுப்பில் தங்கள் மகனை சேர்க்க விரும்பிய தலித் பெற்றோர் தங்கள் மகனை கேந்திரிய விதயாலயா பள்ளியில் சேர்க்க விரும்பிய பெற்றோர் கேந்திரிய வித்யாலயா பள்ளி நிர்வாகத்தை அணுகினார்கள். அப்போது பள்ளி முதல்வர் ஆனந்தன் ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.லஞ்சம் தர ஒப்புக் கொண்ட பெற்றோர் சி.பி.ஐயிடம் முறையிட்டனர். அவர்கள் கையும் களவுமாக ஆனந்தனை பிடிக்க திட்டமிட்டனர். ஆனந்தன் கேட்டபடி ஒரு லட்ச ரூபாயை எடுத்துக் கொண்டு கேந்திரிய வித்யாலயா பள்ளி வளாகத்திற்குள் குடியிருக்கும் ஆனந்தன் வீட்டிற்கு லஞ்சம் கொடுக்க பெற்றோர் சென்ற போது அங்கு வந்த சி.பி.ஐ போலீசார் ஆனந்தனை கைது செய்தனர். லஞ்சம் ஊழல் செய்வதற்கு சாதி, மதம், மாநில படத்திட்டம்,மத்திய பாடத்திட்டம் என எந்த வித்தியாசமும் இல்லை என்பதை ஆனந்தன் கைது உணர்த்தியிருக்கிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*