முடக்கப்பட்டது அண்ணாசாலை ஐ.பி.எல் போட்டி தோல்வி!

ஸ்டெர்லைட் ஆலையில் உரிமத்தை புதுப்பிக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மறுப்பு:பின்னணி!

தலித் மாணவர் அட்மிஷனுக்கு லஞ்சம்:வித்யாலயா முதல்வர் கைது!

ஹாங்காங்கில் நிரவ் மோடி:இந்தியா கொண்டு வருவதில் சிக்கல்!

குழந்தைகள் நட்ட மரத்தை பிடுங்கி எறிந்து சேவையாற்றிய காவலர்:video

சி.பி.ஐ இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்கள்!

மோடி வருகை: தமிழகம் போர்கோலம் பூணட்டும்-வைகோ அறிக்கை

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகமே கொந்தளித்துக் கொண்டிருக்கும் போது சென்னையில் ஐ.பி.எல் போட்டிகளை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது. இதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு இருந்த போதும் எதிர்ப்பையும் மீறி கிரிக்கெட் போட்டியை நடத்தியே தீருவது என தமிழக அரசும், மத்திய அரசும் கிரிக்கெட் வாரியமும் முடிவு செய்தது. பல்லாயிரம் காவலர்கள், துணை ராணுவப்படை என பல்லாயிரம் பேரை சேப்பாக்கம் ஸ்டேடியத்தைச் சுற்றி நிறுத்தியது ஒபிஎஸ்-இபிஎஸ் அரசு.
ஆனால் அறிவித்தபடி போராட்டம் நடக்கும் என தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை நிறுவனர் பாரதிராஜா தலைமையிலான பிரமுகர்கள் மறியல் நடத்துவோம் என அறிவித்தனர். ஆனால் அவர்கள் வருவதற்கு முன்பே அண்ணா சாலையின் பல இடங்களில் எஸ்.டி.பி.ஐ , மக்கள் அதிகாரம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சியினர் ஆங்காங்கே போராட்டங்களை நடத்தினார்கள். இதனால் வாகனங்கள் நகராமல் அப்படியே நின்றதால் போலீசாரால் போராட்டம் நடந்த இடத்தை நெருங்க முடியவில்லை.
சேப்பாக்கத்தில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலில் பலர் படுகாயம் அடைந்தனர். சென்னை அண்ணா சாலையில் ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டதால் என்ன செய்வது என தெரியாத போலீசார் அவர்களுடன் மோதல் போக்கை கடை பிடித்தனர். ஆனால் போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல மறுத்தனர். இதனால் ஒட்டு மொத்த சென்னையும் முடங்கியுள்ளது.
வீரர்கள் தங்கியுள்ள விடுதிகளில் இருந்து வெளியில் வர முடியாத சூழல் உள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*