மைதானத்திற்குள் செருப்பு வீச்சு:5 பேர் கைது!

பின்வாசல் வழியே வீரர்கள்: வெறிச்சோடிய மைதானம்!

முடக்கப்பட்டது அண்ணாசாலை ஐ.பி.எல் போட்டி தோல்வி!

பாரதிராஜா,கவுதமன்,வெற்றிமாறன், சீமான் கைது தடியடி!

ஸ்டெர்லைட் ஆலையில் உரிமத்தை புதுப்பிக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மறுப்பு:பின்னணி!

குழந்தைகள் நட்ட மரத்தை பிடுங்கி எறிந்து சேவையாற்றிய காவலர்:video

சி.பி.ஐ இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்கள்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி  தமிழகத்தில் கொந்தளிப்புகள் நிலவி வரும் நிலையில், எதிர்ப்பையும் மீறி ஐ.பி.எல் போட்டி  சில நூறு ரசிகர்களின் பங்கேற்போடு நடந்து வரும் நிலையில் மைதானத்திற்குள் செருப்பு வீசப்பட்டது. இதனால் போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

ஆரம்பம் முதலே போலீசார் மிகக்கடுமையான பாதுகாப்பை வழங்கிய போதிலும் வீரர்களை மைதானத்திற்குள் கொண்டு வருவதற்குள்ளாகவே பெரும் பாடு ஆகி விட்டது.   அவசரத்தில் அம்பயரையும் அழைத்து வர மறந்து விட்ட நிலையில், போட்டி தாமதமாக துவங்கியது. போட்டி துவங்கிய சிறிது நேரத்தில் கிரிக்கெட் வீரர் ஜடேஜா நின்றிருந்த நேரத்தில் சில செருப்புகள் வீசப்பட்டது.

இதனால் போட்டி நிறுத்தப்பட்டு காலனி வீசியவர்கள் கைது செய்யப்பட்டார்கள். நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஐந்து பேர் காலனி வீச்சு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் மீது என்ன வழக்குகள் பாயும் என்பது   தெரியவில்லை.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*