ஸ்டெர்லைட் ஆலையில் உரிமத்தை புதுப்பிக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மறுப்பு:பின்னணி!

தலித் மாணவர் அட்மிஷனுக்கு லஞ்சம்:வித்யாலயா முதல்வர் கைது!

ஹாங்காங்கில் நிரவ் மோடி:இந்தியா கொண்டு வருவதில் சிக்கல்!

குழந்தைகள் நட்ட மரத்தை பிடுங்கி எறிந்து சேவையாற்றிய காவலர்:video

சி.பி.ஐ இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்கள்!

மோடி வருகை: தமிழகம் போர்கோலம் பூணட்டும்-வைகோ அறிக்கை

தூத்துக்குடியில் அமைந்துள்ள கனிம ஆலையான ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கான உரிமத்தை புதுப்பிக்க தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மறுத்துள்ளது.
தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பேராசிரியர் பாத்திமா பாபு தலைமையில் சாதி மதம் பாராது தூத்துக்குடி மக்கள் போராடி வருகின்றன. இந்திய அளவில் கவனம் ஈர்த்த இந்த போராட்டத்தையொட்டி ஸ்டெர்லைட் நிர்வாகம் பாரமரிப்பு பணிகளுக்காக ஆலையை 15 நாட்கள் மூடுவதாக அறிவித்தது.
ஆனால், ஆலை இயங்குவதற்கான லைசென்ஸ் முடிவுக்கு வந்துள்ளதால் உரிமத்தை புதுப்பிக்கவே ஆலையை மூடியதாக தகவல்கள் வெளியான நிலையில், ஆலை நிர்வாகம் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் லைசென்சை புதுப்பிக்கக் கோரி விண்ணப்பித்தது.
58 நாட்களாக போராட்டங்கள் தொடர்ந்து வரும் நிலையில் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வந்த பின்னர் நீதிமன்றத்தின் மூலம் ஆலை நிர்வாகம் அனுமதி பெற்றுக் கொள்ளட்டும் . இப்போதைய சூழலில் ஆலை இயங்க அனுமதி கொடுத்தால் மக்களின் வெறுப்பை இந்த விவகாரத்திலும் சம்பாதிக்க நேரிடும் என்பதால் தற்காலிகமாக மக்களை திசை திருப்பும் நடவடிக்கையாக இது தெரிகிறது என்ற கருத்தும் பரவலாக வருகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*