ஹாங்காங்கில் நிரவ் மோடி:இந்தியா கொண்டு வருவதில் சிக்கல்!

குழந்தைகள் நட்ட மரத்தை பிடுங்கி எறிந்து சேவையாற்றிய காவலர்:video

சி.பி.ஐ இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்கள்!

மோடி வருகை: தமிழகம் போர்கோலம் பூணட்டும்-வைகோ அறிக்கை

பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 12,700 கோடி அளவுக்கு மோசடியில் ஈடுபட்ட குஜராத்தைச் சேர்ந்த வைர வியபாரியான நிரவ்மோடி சீனாவின் சிறப்பு நிர்வாக நகரமான ஹாங்காங்கில் இருப்பதாக தெரியவந்துள்ளது. வெளிநாட்டுக்கு தப்பியோடிய நிரவ்மோடியை இந்தியா கொண்டு வருவோம் என்று மத்திய அரசு கூறிய நிலையில், ஹாங்காங்கில் பதுங்கியிருப்பதாக சர்வதேச இண்டர் போல் உதவியுடன் இந்தியா அவரது இருப்பை உறுதி செய்தது. நிரவ்மோடியை கைது செய்து இந்தியா கொண்டு வர உதவி செய்ய வேண்டும் என்று சீன அரசுக்கு இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது. குற்றவாளிகளை பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளும் ஒப்பந்தத்தில் இந்தியா எந்த நாட்டுடன் ஒப்பந்தங்கள் போட்டுள்ளதோ அந்த நாட்டில் இருந்து மட்டுமே குற்றவாளிகளை இந்தியாவுக்கு அந்நாட்டு சட்ட விதிகளுக்கு அமைய கொண்டு வர முடியும். ஹாங்காங் சீனாவின் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், இந்த கோரிக்கை தொடர்பாக சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கெங் சுவாங் இது பற்றி செய்தியாளர்களிடம் பேசும் போது:-
“ சீனா மற்றும் ஹாங்காங் என இரு நாடுகள் இரண்டு அமைப்புகள், மேலும் ஹாங்காங்கின் அடிப்படைச் சட்டத்தின் படியும், சீனாவில் மத்திய அரசு அங்கீகாரத்தின் படியும் பிற நாடுகளுடன் நீதித்துறை தொடர்பான பரஸ்பர உதவிகளுக்கு ஹாங்காங்கால் சரியான நடவடிக்கை மேற்கொள்ள முடியும்” என்று கூறி விட்டது.
நிரவ் மோடி தொடர்பான விபரங்களை சீன அரசிடமும் ஹாங்காங் அரசிடமும் அளித்து அவரை கைது செய்யக்கோரும் பிடியாணையையும் அளித்தால் அவரை சட்ட விதிகளுக்கு உட்பட்டு இந்தியா கொண்டு வரலாம். ஆனால் ஹாங்காங் சட்ட விதிகள் அதற்கு அனுமதிக்கிறதா என்பது கேள்விக்குறிதான். பொருளாதார மோசடிகள் எத்தனை பெரிய அளவில் நடந்தாலும் அது கொலைக்குற்றம் போல கடினமான குற்றமாக சட்டம் கருதவில்லை. என்பது நிரவ் மோடியை இந்தியா கொண்டு வருவதில் சிக்கலை ஏற்படுத்தலாம்.

மோடிக்கு எதிர்ப்பு:12-ஆம் தேதி வீடுகளில் கருப்புக்கொடி!

நடிகர்களின் மவுன போராட்டம் எனும் மோசடி போராட்டம்?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*