அண்ணா சாலை போராட்டம் அதிர்ச்சியில் ஒபிஎஸ்- இபிஎஸ்!

மைதானத்திற்குள் செருப்பு வீச்சு:5 பேர் கைது!

பின்வாசல் வழியே வீரர்கள்: வெறிச்சோடிய மைதானம்!

முடக்கப்பட்டது அண்ணாசாலை ஐ.பி.எல் போட்டி தோல்வி!
தமிழர் கலை பண்பாட்டுப் பேரவை என்ற புதிய அமைப்பை இயக்குநர் பாரதிராஜா தலைமையில் துவங்கப்பட்டது. இந்த அமைப்பு அரசியல் அமைப்போ, கட்சி சார்பானதோ அல்ல, தமிழர்களின் பிரச்சனைகளுக்காக போராடும் அமைப்பு என்றார்.
ஆண்டாளை முன்னிறுத்தி கவிஞர் வைரமுத்துவை குறிவைத்து ஒரு சாதியினர் நடத்திய போராட்டங்களின் போது வைரமுத்துவுக்கு ஆதரவாக இயக்குநர் பாரதிராஜா பேசிய பேச்சுக்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. அதனைத் தொடர்ந்து அரசியல் பெரியார் சிலைகளை தகர்க்க வேண்டும் என்ற எச்.ராஜாவின் கருத்துக்கும் மிகக்கடுமையாக எதிர்வினையாற்றியிருந்தார் இயக்குநர் பாரதிராஜா, இவை அனைத்துமே பாரதிராஜாவுக்கு மிக நல்ல பெயரை ஈட்டிக் கொடுத்த நிலையில் தமிழர் கலை பண்பாட்டுப்பேரவையை பாரதிராஜா, இயக்குநர் கவுதமன், சத்யராஜ், அமீர் போன்றோர் இணைந்து உருவாக்கினார்கள்.
அந்த அமைப்புதான் ஐ.பி.எல் போட்டிக்கு எதிராக அண்ணாசாலை போராட்டத்தையும் அறிவித்தது. போராட்ட அறிவிப்பை பாரதிராஜா வெளியிட்ட போது அதை அரசும், காவல்துறையும் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. அண்ணா சாலையில் ஐந்து மணிக்கு மறியல் செய்வோம் என்ற போது “ஏதோ பத்து பதினைந்து பேர் வந்து மறியல் செய்வார்கள் பிடித்து கல்யாண மண்டபத்தில் அடைத்து விட வேண்டியதுதான் என்றுதான் காவல்துறையும் நினைத்திருந்தார்கள்.
ஆனால் மூன்று மணி நேரம் அண்ணா சாலையை முடக்கி ஒட்டு மொத்த இந்திய ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்து உலகம் முழுக்க உள்ள தமிழர்களின் கவனத்தையும் அண்ணா சாலை போராட்டம் தன் பக்கம் ஈர்த்தது. மூன்று மணி நேரத்திற்குப் பிறகு அத்தோடு முடிந்து விடும் என நினைத்த போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஐ.பி.எல் கிரிக்கெட் மேட்ச் நடந்த மைதானத்திற்குள் செருப்பு வீசியும், கருப்புக் கொடி காட்டியும், டார்ச் லைட் அடித்துமாக சுமார் 50-க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் கைதாகியிருக்கிறார்கள்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பின்னர் இந்தியாவின் கவனத்தை அண்ணாசாலை போராட்டம் ஈர்த்தது அரசுக்கு தோல்வியாகவும் காவிரி நீருக்காக போராடுகிறவர்களுக்கு வெற்றியாகவும் பார்க்கப்படுகிறது.

பாரதிராஜா,கவுதமன்,வெற்றிமாறன், சீமான் கைது தடியடி!

ஸ்டெர்லைட் ஆலையில் உரிமத்தை புதுப்பிக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மறுப்பு:பின்னணி!

குழந்தைகள் நட்ட மரத்தை பிடுங்கி எறிந்து சேவையாற்றிய காவலர்:video

சி.பி.ஐ இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்கள்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*