போராட்டக்காரர்களை போலீசிடம் மாட்டிவிடும் ரஜினி:பின்னணி!

அண்ணா சாலை போராட்டம் அதிர்ச்சியில் ஒபிஎஸ்- இபிஎஸ்!

மைதானத்திற்குள் செருப்பு வீச்சு:5 பேர் கைது!

பின்வாசல் வழியே வீரர்கள்: வெறிச்சோடிய மைதானம்!

முடக்கப்பட்டது அண்ணாசாலை ஐ.பி.எல் போட்டி தோல்வி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுக்க பெரும் கொந்தளிப்பு  நிலவுகிறது. பல்வேறு  வகைப்பட்ட போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், இந்த எதிர்ப்புகள் போராட்டங்கள் எதையும் அரசு கண்டு கொள்ளவில்லை. என்பதோடு பிடிவாதமாக ஐ.பி.எல் போட்டியை நடத்தியே தீருவது என்பதில் உறுதியாகவும் இருந்தது.

ஐ.பி.எல் போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அண்ணாசாலையை முற்றுகையிட்ட போலீசாருக்கும் , ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அது போல சேப்பாக்கம் அருகில் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியது. இம்மாதிரி போலீசார் தாக்கும் செய்திகளை ஊடகங்கள் ஒளிபரப்புவதில்லை. ஆனால், ஒரு இளைஞர் போலீசை தாக்கும் விடியோவை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பிய சில ஊடகங்கள் போராட்டக்காரர்கள்  போலீசாரை தாக்கியதாக செய்தி வெளியிடுகிறார்கள். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அரசியலுக்கு வந்திருக்கும்  ரஜினி  இந்த போராட்டங்கள் பற்றியோ காவிரி பற்றியோ பெரிதாக எதையும் பேசி விடாத நிலையில், நேற்று போலீசார் மீது ஒருவர் தாக்குதல் நடத்தியது தொடர்பாக ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார் அதில்,

“ வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான்.இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து.சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்றவேண்டும்.” எனக் கோரியுள்ளார்.

உலகெங்கிலும் நடக்கும் மக்கள் போராட்டங்களை வரையறுக்கவோ, இப்படித்தான் நடைபெற வேண்டும் என்று சொல்லவோ முடியாது.  ஜனநாயக வழிகளில் நடைபெறும் போராட்டங்களில் கூட சில இடங்களில் போலீசார் மீதும் தாக்குதல்கள் நடைபெறுகின்றன. காரணம் அரசுக்கும் மக்களுக்கும் இடையில் அரசின் சார்பாக போலீசார் மக்களை எதிர்கொள்கிறார்கள். அரசு செய்ய நினைக்கும் அடக்குமுறைகளை போலீசை வைத்தே செய்யும் நிலையில் போலிசாரோடு ஆர்ப்பாட்டக்காரர்கள் மோதுவது தவிர்க்க முடியாதது.

சமீபத்தில் நடிகர் சங்கம் சென்னையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடத்தப்பட்ட உண்ணாவிரதத்தில் தான் கலந்து கொள்ள வேண்டும் என்றால் யாரும் பேசக்கூடாது என நடிகர் சங்கத்திற்கு உத்தரவு போட்ட  ரஜினி மவுன போராட்டம் என அறிவித்த பின்னர்தான் போராட்டத்திற்கு வந்தாராம். இதை அறிந்த பாரதிராஜா, சத்யராஜ், சீமான் போன்றோர் அந்த போராட்டத்தில் கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டமாக மாற்றினார்கள்.

இந்த கடுப்பில்தான் நாம் தமிழர் கட்சியினரை அவமதிக்கும் விதத்தில் ரஜினி டுவிட் செய்துள்ளார்.

#Chepauk #chennaisuperkings #போலீஸ்தடியடி #சென்னை_சூப்பர்கிங்க்ஸ் #CHENNAI_SUPER_KINGS_FAILS #காவிரிமேலாண்மைவாரியம் #CHENNAI_IPL

பாரதிராஜா,கவுதமன்,வெற்றிமாறன், சீமான் கைது தடியடி!

ஸ்டெர்லைட் ஆலையில் உரிமத்தை புதுப்பிக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மறுப்பு:பின்னணி!

குழந்தைகள் நட்ட மரத்தை பிடுங்கி எறிந்து சேவையாற்றிய காவலர்:video

சி.பி.ஐ இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்கள்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*