காவிரிக்காக போராடிய அனைத்து தலைவர்களையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய எடப்பாடி திட்டம்!

சீமான் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு:பின்னணியில் ரஜினி!

அண்ணா சாலை போராட்டம் அதிர்ச்சியில் ஒபிஎஸ்- இபிஎஸ்!

மைதானத்திற்குள் செருப்பு வீச்சு:5 பேர் கைது!

பின்வாசல் வழியே வீரர்கள்: வெறிச்சோடிய மைதானம்!

முடக்கப்பட்டது அண்ணாசாலை ஐ.பி.எல் போட்டி தோல்வி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் தோல்வியடைந்த தமிழக அரசு. எதிர்ப்பு போராட்டங்களை கையாள முடியாமல் தவித்து வருகிறது. இந்நிலையில், சீமானை கொலை முயற்சி வழக்கில் கைது செய்வதோடு, அவரை குண்டர் சட்டத்தில் அடைக்கவும் இபிஎஸ்- ஒபிஎஸ் அரசு முடிவு செய்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை அடுத்து தமிழகத்தில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிகளை நடத்த வேண்டாம் என்று தமிழக மக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், ஐ.பி.எல் போட்டிகளை நடத்தியே தீருவது என தமிழக அரசும், மத்திய அரசும், கிரிக்கெட் வாரியம் தீவிரமாக இருந்தது. ஐ.பி.எல். போட்டி நடந்தால் கடுமையாக எதிர்ப்போம் என்று இயக்குநர் பாரதிராஜா தலைமையிலான தமிழ் அமைப்பினர் அறிவித்த நிலையில் , ஐ.பி.எல் போட்டி நடந்த அன்று அண்ணா சாலையை பல்லாயிரம் பேர் முற்றுகையிட்டனர்.
இதனால் ஐ.பி.எல் போட்டி தோல்வியில் முடிந்தது. கிரிக்கெட் மைதானத்தில் செருப்பு வீசியது, கறுப்புக்கொடி காட்டியது என சுமார் 58 நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று பிரதமர் மோடியின் வருகைக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் கறுப்புக்கொடி போராட்டம் அறிவித்திருந்தனர்.
திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் கறுப்புக் கொடி போராட்டம் நடத்திய நிலையில். பாராதிராஜா, அமீர், வெற்றிமாறன். உள்ளிட்ட பல தலைவர்கள் சென்னை மீனம்பாக்கத்தில் கறுப்புக் கொடி போராட்டம் நடத்தினார்கள். அது போல நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலையில் கறுப்புக் கொடி போராட்டம் நடத்தினார்கள். சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினரை கைது செய்த போலீசார் பல்லாவரம் ஸ்ரீகிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இந்நிலையில், பிரதமர் மோடி சென்னைக்கு வந்து சென்ற சற்று நேரத்தில் சீமான் தங்க வைக்கப்பட்டுள்ள கல்யாணமண்டபத்தைச் சுற்றி அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளார்கள். சீமான், பாரதிராஜா, மணியரசன், அமீர், வெற்றிமாறன். தமிமுன் அன்சாரி, கருணாஸ், உள்ளிட்ட அனைத்து தலைவர்களையும் கைது செய்ய எடப்பாடி பழனிசாமி அரசு திட்டமிட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*