ஆசிஃபா வன்புணர்வு கொலை : நீதி கிடைக்குமா?

ஆசிஃபாவுக்கு நீதி கிடைக்குமா?

சீமான் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு:பின்னணியில் ரஜினி!

அண்ணா சாலை போராட்டம் அதிர்ச்சியில் ஒபிஎஸ்- இபிஎஸ்!

மைதானத்திற்குள் செருப்பு வீச்சு:5 பேர் கைது!

பின்வாசல் வழியே வீரர்கள்: வெறிச்சோடிய மைதானம்!

முடக்கப்பட்டது அண்ணாசாலை ஐ.பி.எல் போட்டி தோல்வி
காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் பழங்குடி சிறுமியான எட்டு வயது ஆசிஃபாவை கடத்தி போதை மருந்து கொடுத்து இந்துக் கோவில் ஒன்றில் அடைத்து வைத்து கூட்டாக பாலியல் வன்முறை செய்து கொலை செய்த வழக்கு பாஜகவுக்கு இந்தியா முழுக்க நெருக்கடியை உருவாக்கியிருக்கிறது.
குறிப்பாக தென் மாநிலங்களான தமிழகம், கேரளத்தில் இது கடினமான எதிர்வினைகளை உருவாக்கியிருக்கும் நிலையில், பிரதமர் மோடி நேற்று “குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்” என்றார். ஆனால் காஷ்மீரில் ஆசிஃபாவின் கொலை கடும் எதிர்வினைகளை உருவாக்கியிருக்கிறது.
பழங்குடிகளை அப்பகுதியில் இருந்து துரத்துவதோடு,முஸ்லீம் வெறுப்பும் ஆசிஃபா படுகொலையின் பின்னணியில் உள்ளது.ஆசிஃபா கொலை உலகம் முழுக்க பெரிதும் சர்ச்சைகளை உருவாக்கிய போதிலும், பாஜகவுக்கு எதிரான எந்த ஒரு மக்கள் பெருந்திரள் போராட்டங்களையும் காங்கிரஸ் கட்சியால் முன்னெடுக்காத நிலையையும் இத்தோடு பார்க்க முடியும், கடந்த மன்மோகன்சிங்கின் காங்கிரஸ் ஆட்சியில் நிர்பயா கொலை வழக்கை வைத்து டெல்லியை உலுக்கிய பாஜக இப்போது ஆசிஃபா விவகாரத்தில் சிக்கியிருப்பது சமூக வலைத்தளங்களிலும், காங்கிரஸ் அல்லாத பொதுப்பிரிவினரிடமும்தான். பெரும்பாலான இந்துக்களை ஆசிஃபாவின் கொலை காயப்படுத்தியிருக்கும் நிலையில், பாஜகவின் இமேஜ் மீதான மிகப்பெரிய அடியாக ஆசிஃபா விவகாரம் மாறியிருக்கிறது,
“எங்கள் வீட்டில் சிறிய வயதில் பெண் குழந்தைகள் இருக்கிறார்கள் பாஜகவினர் இங்கே வர வேண்டாம்” என்றும். “இந்த தெருவில் பாஜக அலுவலகம் உள்ளது ஆகவே இந்த பகுதியில் பெண்குழந்தைகள் நடமாட வேண்டாம்” என்றும் எச்சரிக்கை பலகை எழுதி வைத்து பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்கிறார்கள்.
உலகம் முழுக்க ஆசிஃபாவுக்கு லட்சக்கணக்கான ட்விட்டுகளும், ஸ்டேட்டஸ்களும் போடப்பட்டுள்ளது.2014 – காலக்கட்டத்தில் சமூக வலைத்தளங்கள்தான் பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்திற்கு பெரிதும் கை கொடுத்தன. ஆனால் இப்போது நிலமை தலைகீழாக மாறி விட்டது. வட மாநிலங்களில் நடந்த பல கலவரங்களுக்கு பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்சப் மூலம் பரப்பட்ட பல பொய்யான தகவல்களே காரணமாக இருந்தன. அப்படி கலவரம் நடந்த இடங்களில் எல்லாம் பாஜக வெற்றியும் பெற்றது. ஆனால், ஆசிஃபா விவகாரத்தில் உள்ளூர் பாஜகவினர் துவங்கி ஆசிஃபா விவகாரத்தில் ஏதாவது நியாயம் பேசுகிறவர்களைக் கூட மக்கள் வெறுக்கிறார்கள்.
தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்ட #GOBACKMODI உலகம் முழுக்க ட்ரெண்டிங் ஆகி அது மோடிக்கு தலைவலியை உருவாக்கியதோடு தமிழகத்தின் மீது பெரும் கடுப்பையும் அவருக்கு உருவாக்கியிருப்பதாக கூறப்படுகிறது. சிறப்பாக சந்திப்பார் என்று அழைத்துச் செல்லப்பட்ட பத்திரிகையாளர்களையும் அவர் சந்திக்கவில்லை தமிழக பாஜக தலைவர்கள் மீது ஏகப்பட்ட கடுப்பில் இருக்கிறார் என்றும் கூறப்படுகிற நிலையில். ஆசிஃபாவின் கொலை மேலும் ஒரு கரும்புள்ளியாக அமைந்துள்ளது. காரணம் ஆசிஃபா கொலையில் ஈடுபட்டவர்கள் எவரும் நேரடியாக பாஜக உறுப்பினர்களோ, அல்லது அதில் பதவியில் இருப்பவர்களாகவோ தெரியவில்லை.
ஆனால். உள்ளூர் பாஜகவினரின் ஆதரவு இந்த கும்பலுக்கு இருப்பதுதான் தலைவலியாக மாறியிருக்கிறது. ஆசிஃபா கொலை வழக்கை திசை திருப்புவதோடு, அந்த வழக்கையே இல்லாமல் ஆக்குவதும் இவர்கள் நோக்கம். ஆசிஃபா கொலைக்கு நீதி கிடைப்பது சந்தேகம் தான் ஆனால் மக்கள் மன்றத்தில் இந்த கொலை பாதகர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை உருவாகியிருக்கிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*