நாளை கவர்னர் மாளிகை முற்றுகை:பண்ருட்டி வேல்முருகன் அறிவிப்பு

அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி வரும் ஆளுநர் பன்வாரி லால் புரோகித்தை திரும்பப் பெறக் கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி வேல்முருகன் தலைமையில் நாளை கவனர் மாளிகை முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தின் பின்னர் தமிழகத்தில் ஆளுநர்கள் ஆட்சிதான் நடந்து வருகிறது. தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடந்த போதிலும் ஆளுநர்  முழு அதிகாரத்துடன் தமிழகத்தை ஆட்சி செய்கிறார். வளர்ச்சிபணிகள் ஆய்வு எனும் பெயரில் ஆய்வுகள் செய்வது,துணைவேந்தர்களை தானே நியமிப்பது. உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் அவருக்கு எதிராக அதிருப்தி நிலவும் நிலையில், கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி பேசிய ஆடியோவில் ஆளுனர் பன்வாரிலால் புரோகித் பெயரும் இடம் பெற்றுள்ளது.

இதற்கு ஆளுநர் விளக்கம் அளித்த நிலையில், தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் ஆளுநரை திரும்ப பெறக் கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் அறிவித்துள்ளது. நாளை  18-04-2018 அன்று காலை 10 மணிக்கு முற்றுகை போராட்டம் நடக்கும் என அறிவித்துள்ளார் பண்ருட்டி வேல்முருகன்.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*