ஆளுநர் விளக்கம்எப்படி ஏற்றுக் கொள்வது?

கவர்னர் மாளிகை முற்றுகை:பண்ருட்டி வேல்முருகன் அறிவிப்பு

பெரும் கனவுகளோடும் ஆசைகளோடும் பெண் குழந்தைகளை கல்லூரிக்கு அனுப்பும் அத்தனை தமிழக பெற்றோர்களையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. பேராசிரியை நிர்மலா தேவியின் ஆடியோ. பல்கலைக்கழகங்களின் உயரதிகாரிகளின் பாலியல் இச்சைகளுக்கு மாணவிகளை இரையாக்கும் பச்சையான புரோக்கர் வேலையை பார்த்திருக்கும் பேராசிரியை நிர்மலா தேவி தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோகித் பெயரையும் அவ்வுரையாடலின் இடையே சொன்னதால். ஆளுநருக்காகத்தான் நிர்மலா தேவி மாணவிகளை ஏற்பாடு செய்தாரா? என்ற கேள்வி பெற்றோர்கள், மாணவர்கள், கல்வித்துறை அதிகாரிகள், பொதுமக்களிடையே எழுந்த நிலையில், தன்னிலை விளக்கம் அளிக்கும் விதமாக ஆளுநர் மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த கவர்னர் பன்வாரி லால் புரோகித் சில விளக்கங்கங்களை தாமாக முன் வந்து அளித்தார்:-
“அந்த பெண்ணை நான் இதற்கு முன்னர் பார்த்ததே இல்லை.பாதுகாப்பு அதிகாரிகளை மீறி யாராலும் தன்னை நெருங்கமுடியாது’ என்றார்.
நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக பேசிய அவர்:-
“ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் நடத்தும் விசாரணை முழுமையாக முடிக்கப்பட்டு தவிறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்” என்றார். இந்த விசாரணையில் ஏன் பெண் அதிகாரிகள் இல்லை என்ற கேள்விக்கு, “ஆர்.சந்தானம் அனுபவம் மிக்க அதிகாரி அவரால் இந்த விசாரணையை முழுமையாக முடிக்க முடியும்” என்றார்.
”அண்ணா பல்கலைக்கழகத்தில் சூரப்பா நியமனத்தில் விதி மீறல் எதுவும் இல்லை. துணைவேந்தர் நியமனத்தில் மாநில அரசின் கருத்தைக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை” என்றார்.
ஆளுநர் தாத்தா இல்லை என்ற நிர்மலாவின் குரலுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அளித்துள்ள விளக்கத்தில் தனக்கு 70 வயது ஆகி விட்டதாகவும் பேரன் பேத்தி எடுத்து விட்டதாகவும் கூறினார். ஆனால் நடந்துள்ள விவகாரம் தமிழக மாணவர்களை கொதிப்படைய வைத்துள்ள நிலையில், நிர்மலா தேவியின் தொலைபேசி உரையாடலில் ஆளுநர் பன்வாரி லால் புரோகித் பெயரும் உள்ளது. அது தொடர்பாக அவருடைய விளக்கம் ஏற்றுக் கொள்ளப்படும் என்றால். ஒரு குற்றத்தில் சந்தேக நபராக கைது செய்யப்படும் ஒவ்வொருவரின் விளக்கங்களும் ஏற்கப்படுமா என்ற கேள்வியும் எழுகிறது.

ஆளுநர் தன்னை விசாரணைக்கு உட்படுத்தி தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*