எஸ்.வி.சேகர் படத்தை செருப்பால் அடித்து போராடிய கர்நாடக பத்திரிகையாளர்கள்!

நிர்மலா தேவிக்கு ‘கரண்ட் கம்பி’ ஆபத்து!

சென்னையில் எஸ்.வி.சேகர் வீட்டின் கேட் மீது சில பெண் பத்திரிகையாளர்கள் கல்வீசியதை தமிழகத்தின் சில பத்திரிகையாளர்களே கண்டித்த நிலையில்,கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் எஸ்.வி.சேகர் படத்தை செருப்பால் அடித்து போராட்டம் நடத்தியுள்ளார்கள்.

பாஜக செய்தி தொடர்பாளரான எஸ்.வி.சேகர் சமீபத்தில் பெண் பத்திரிகையாளர்களை பாலியல் ரீதியாக கொச்சைப்படுத்தி முகநூல் பதிவொன்றை வெளியிட்டார் அது கடும் சர்ச்சைகளை உருவாக்கிய நிலையில், பாஜக அலுவலகத்தில் மனுக்கொடுக்கும் போராட்டத்தை சில பத்திரிகையாளர்கள் நடத்தினார்கள். இன்னும் சில பத்திரிகையாளர்களோ எஸ்.வி.சேகரடமே தங்களின் மனக்குமுறலை வெளிப்படுத்தலாம் என அவரது வீட்டிற்குச் சென்றார்கள். அங்கு சென்ற போது போலீசார் அவர்களை தடுக்க, வீட்டிற்குள்தான் சேகர் இருக்கிறார் என்று நினைத்து அங்கேயே கோஷங்களை எழுப்பிய நிலையில், சில பெண் பத்திரிகையாளர்கள் கோபமாகி அவரது வீட்டு கேட்டின் மீது செருப்புகளையும், கற்களையும் வீசினார்கள். இந்த போராட்டம் ஊடகங்களில் பணியாற்றும் பெண்கள், இளம் பத்திரிகையாளர்களிடம் பெரும் ஆதரவை பெற்றுக் கொடுத்ததோடு, பாஜகவில் உள்ள சில பெண்களே பெண்களின் இந்த உணர்வுகளை புரிந்து கொண்டார்கள்.

பாஜக தமிழக தலைவர் தமிழிசை எஸ்.வி.சேகரை கடுமையாக கண்டித்த போதும் கல்வீசிய நிகழ்வை கண்டிக்கவில்லை. ஆனால், பாஜக அலுவலகத்தில் மனுக்கொடுக்கும் போராட்டம் நடத்திய சில பத்திரிகையாளர்கள் “நாங்கள் நடத்திய மனுக்கொடுக்கும் போராட்டம்தான் உண்மையான போராட்டம், எஸ்.வி.சேகர் வீட்டில் கல்வீசியது தவறு” என்று பேச, இந்து அமைப்புகள். பாஜகவைச் சேர்ந்தவர்களே எஸ்.வி.சேகருக்கு ஆதரவாக பேச தயங்கிய போது எடுத்துக் கொடுத்தது போலாகி விட்டது.

இப்போது எஸ்.வி.சேகர் பேசிய அருவறுப்பான வார்த்தைகள் பின்னுக்குப் போய், கல்வீசிய நிகழ்வு  பேசுபொருளாகி இருக்கிறது. தமிழக ஊடகச் சூழல் இப்படி இருக்க, பெண்களை இழிவு செய்த எஸ்.வி.சேகரை கண்டித்து கர்நாடக ஊடகவியலாளர்கள் இன்று பெங்களூருவில் போராட்டங்களை நடத்தினார்கள்.

இந்த போராட்டத்தில் எஸ்.வி.சேகரின் உருவப்படத்திற்கு செருப்பு மாலை போடப்பட்டது. அவருக்கு எதிராக கண்டண முழக்கமிட்ட பெண் பத்திரிகையாளர்கள் எஸ்.வி.சேகர் கைது செய்யப்பட வேண்டும் என்று பேசினார்கள்.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*