சமூக விஞ்ஞானிகள் ராகவன்,சுமந்த் சி ராமன் இனி என்ன செய்வார்கள்?

எஸ்.வி.சேகர் படத்தை செருப்பால் அடித்து போராடிய கர்நாடக பத்திரிகையாளர்கள்!

நிர்மலா தேவிக்கு ‘கரண்ட் கம்பி’ ஆபத்து!
இந்தியா முழுக்க பாஜக தலைவர்களின் பேச்சு அக்கட்சிக்கு பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. பொதுவாக பாஜகவினரின் பேச்சு “பாஜக ஒரு உயர்சாதியினரின் கட்சி,மக்கள் பிரச்சனையில் மிக மோசாமாக பாஜகவினர் பேசுகிறார்கள்” என்ற எண்ணங்களையே மக்களிடம் உருவாக்கியது. குறிப்பாக தமிழகத்தில் பாஜகவினரின் பேச்சுகள் கடும் எதிர்ப்பை மக்களிடம் உருவாக்கியது.சமீபத்தில் தமிழகம் வந்த மோடிக்கு எதிர்ப்பை பதிவு செய்த தமிழகம் #GOBACKMODI என்ற பெயரில் ஹேஷ் டேக்கை உருவாக்கி உலக அளவில் டிரெண்டிங் ஆக்கினார்கள். கடந்த நான்கு ஆண்டுகளில் மோடி பதவிக்கு வந்த பின்னர் உலக அளவில் பதியப்பட்ட அனைவரின் கவனத்தையும் ஈர்த்த எதிர்ப்பாக இது பதிவான நிலையில், பாஜக தலைமை மாநில தலைவர்கள் மீது அதிருப்தி அடைந்திருக்கிறது.
நேற்று மொபைல் செயலி மூலம் தன் கட்சி நிர்வாகிகளிடம் பேசிய மோடி:-
“நமது கட்சியின் பெரும்பான்மையான நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் இதர பிற்படுத்தப்பட்டோர், தலித் மற்றும் பழங்குடியினராக உள்ளார்கள்” என்றார். இது தொலைக்காட்சிகளில் கருத்துச் சொல்லும் உயர்சாதியினரை குறிவைத்தே மோடி பேசியதாக கூறப்படுகிறது.பாஜகவுக்கு பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் வாக்களிக்கும் நிலையில் அவர்களுக்கு எதிராக கடுமையான கருத்துக்களை பாஜக தலைமையில் இருக்கும் உயர்சாதியினர் பேசி வருகிறார்கள். இது தொடர்பான விரிவான புகாரை கீழ் மட்டத்தில் உள்ளவர்கள் கட்சியின் தலைமைக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.
“காங்கிரஸ் தவறு செய்ததால் மட்டும் நாம் ஆட்சிக்கு வரவில்லை.மக்களுடன் நாம் இணைந்து நின்றதால் ஆட்சிக்கு வந்தோம்.தற்போது நமது கடமை மக்கள் எதிர்கொள்ளும் கடுமையான பிரச்சனைகளை தீர்த்து வைக்க வேண்டும் என்பதுதான். நாம் தொடர்ந்து தவறுகள் செய்வதன் மூலம் ஊடகங்களுக்கு தீனி போட்டு வருகிறோம். கேமிராக்கள் முன்னால் தோன்றி ஏதோ சமூக விஞ்ஞானிகள் போலவும் ஆய்வாளர்கள் போலவும் வார்த்தைகளை கொட்டுகிறோம்.பயங்கரவாதம், பாலியல் வன்கொடுமைகள் போன்ற விவகாரங்களில் நாம் வாய் தவறி கூறும் வார்த்தைகள் ஊடகங்களில் பெரிதாக்கப்படுகின்றன.இது பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் நமது கருத்துக்களை தொடர்ந்து கூறி வருகிறோம். இதனால் கட்சிக்கும், ஆட்சிக்கும் அவப்பெயர் உருவாகி வருகிறது.எனவே அர்த்தமற்ற முறையில் கருத்துக்கள் கூறுவதையும், ஆவக்கோளாறில் சமூக விஞ்ஞானிகள் போல பேசுவதையும் நாம் நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று பேசினார் பிரதமர் மோடி.
இது தொலைக்காட்சிகளில் அதி மேதாவிகள் போல பேசித் தள்ளும் பாஜக தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. தமிழகத்தின் ராகவன், சுமந்த் சி ராமன், பத்ரி ஷேஷாத்ரி போன்ற பிராமண அறிவுஜீவிகள் என்று நம்பிக்கொண்டிருப்பவர்களுக்கு மோடியின் உரை சங்கடத்தை உருவாக்கியிருக்கிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*