தொலைக்காட்சிகளில் மட்டும் செல்வாக்கோடு இருக்கும் பாஜக!

சமூக விஞ்ஞானிகள் ராகவன்,சுமந்த் சி ராமன் இனி என்ன செய்வார்கள்?

எஸ்.வி.சேகர் படத்தை செருப்பால் அடித்து போராடிய கர்நாடக பத்திரிகையாளர்கள்!

நிர்மலா தேவிக்கு ‘கரண்ட் கம்பி’ ஆபத்து!

தமிழக தொலைக்காட்சி ஊடகங்களின் கடந்த நான்காண்டுகால பயணத்தை ஜெயலலிதா மரணத்திற்கு முன் பின் என இரண்டாக பிரிக்க முடியும். ‘ஜெ’ மரணத்திற்கு முன்னர் அதிமுகவுக்கு அஞ்சி நடுங்கி கருத்துருவாக்கம் செய்து வந்த நிலையில், அவரது மரணத்தின் பின்னர் தொலைக்காட்சிகளில் வெற்றிடம் ஒன்று உருவானது.

உண்மையில் பாஜக அரசியலில் வெற்றிடம் உள்ளதாகச் சொன்னது. நான் இதை பலமுறை மறுத்து எழுதினேன். அரசியலில் எந்த வெற்றிடமும் இல்லை என்று.கடைசியில் அது உண்மை என்பதை சமூக வலைத்தளங்கள் எரிய விட்ட #gobackmodi நிரூபித்தது.
ஊடகங்களில் உருவான வெற்றிடத்தை பாஜகவினர் பயன்படுத்திக் கொண்டார்கள். அப்பல்லோவில் ஜெயலலிதாவின் இறுதி மணி நேரங்களின் போது நடந்த பேரங்கள், மிரட்டல்கள் போல ஊடகங்கவியலாளர்களுக்கும் பாஜகவின் மிரட்டல்கள் புதிதாக இருந்தன.முதலில் பாஜகவுக்கு பழக்கப்பட சிரமப்பட்டார்கள். இப்போது பழகி விட்டார்கள். ஆனால் இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் அடுத்து வரும் 20 ஆண்டுகளுக்கு நோட்டாவுக்குக் கீழ்தான் பாஜக ஓட்டு வாங்கும் என்கிற நிலை தமிழகத்தில் உருவாக காரணம் ஊடகங்கள் அல்ல.

சமுக வலைத்தளங்கள் இணைய ஊடகங்கள். இந்த இரண்டின் தாக்குதலையும் பாஜகவால் எதிர்கொள்ள முடியவில்லை.2014-ல் விகடன் குழுமம் பாஜகவுக்கு 15% வாக்குவங்கி அதிகரித்திருக்கிறது என எழுதியது. அப்படி எழுதிய பின்னர்தான் அவர்கள் நோட்டாவுக்குக் கீழே சென்றார்கள்.
சமுக வலைத்தளங்களில் கிழிந்து தொங்கும் பாஜக ஊடகங்களிலும் அமபலமாகத் துவங்கியது. இந்த தாக்குதலை மிகச்சவாலாக துவங்கி வைத்தது வே.மதிமாறன்.இப்போது, ஊடகங்களால் பயனேனும் இல்லை என்கிற கசப்பான உண்மையை பாஜக உணர்ந்திருக்கிறது.அதன் ஒரு வெளிப்பாடுதான் “சமூக விஞ்ஞானிகள் போல ஊடகங்களில் பேசாதீர்கள்” என்று மோடி பாஜகவினருக்கு கட்டுப்பாட்டு போட்டது.
ஆனால், தமிழ் ஊடகங்களைப் பொறுத்தவரை அனைத்து தொலைக்காட்சிகளிலுமே இப்போது இரண்டு இருக்கைகள் ஒதுக்குவது பாஜகவுக்குதான். மக்கள் மன்றத்தில் செல்வாக்கில்லாத பாஜக செல்வாக்கோடு இருப்பது தொலைக்காட்சிகளில்தான்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*