ஸ்டாலினை எனக்கு எப்போதும் பிடிக்காது: விஜயகாந்த்

தொலைக்காட்சிகளில் மட்டும் செல்வாக்கோடு இருக்கும் பாஜக!

சமூக விஞ்ஞானிகள் ராகவன்,சுமந்த் சி ராமன் இனி என்ன செய்வார்கள்?
நீண்ட காலம் பேசாமல் இருந்த விஜயகாந்த் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு நேர்காணல் ஒன்றை அளித்துள்ளார். அதில் ஸ்டாலின் தொடர்பாக பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். ஏற்கனவே எடுத்துக் கொண்ட மருத்துவ சிகிச்சைகள் அவரது குரல் வளத்தையும், பேசும் திறனையும் பாதிப்படையச் செய்த நிலையில் பேசும் பயிற்சி அவருக்கு வழங்கப்பட்டது. இப்போது சமீபகாலமாக ஊடகங்களிடம் பேசி வருகிறார். அவர் டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழுக்கு வழங்கியுள்ள நேர்காணலில்.
“ காவிரி விவகாரத்தில் கருணாநிதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தால் முதல் ஆளாகச் சென்றிருப்பேன். ஆனால் ஸ்டாலின் தன்னை முன்னிலைப்படுத்தியே அனைத்தையும் செய்கிறார். அவர் புகழ் பாடுவதற்காக நான் ஏன் ஸ்டாலினின் அனைத்துக் கட்சி கூட்டத்திற்குச் செல்ல வேண்டும். அவர் என்ன கருணாநிதியா? ஸ்டாலினை எனக்கு எப்போதுமே பிடிக்காது. எம் மனச்சாட்சி அவரை ஏற்காது.
2016- ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் குறைந்தது 60 தொகுதிகளை நாங்கள் கேட்டோம். திமுக 40 தொகுதிகள் தர தயாராக இருந்தது.ஆட்சியில் பங்கு என்ற நிபந்தனையை நாங்கள் முன் வைத்தோம் அதை திமுக ஏற்றுக் கொள்ளவில்லை. அது நடந்திருந்தால் நானும் அவரும் அமைச்சர்களாக இருந்திருப்போம்.இனி ஒரு போதும் ஸ்டாலின் முதல்வராக முடியாது.ஓய்வில் இருக்கும் கருணாநிதியைச் சென்று சந்திக்க விரும்பினேன். ஆனால் அதற்கு ஸ்டாலினிடம் பேசுமாறு பதில் வந்தது. மக்கள் நலக்கூட்டணியில் இருந்தவர்கள் இப்போது திமுகவுடன் ஸ்டாலினுடம் இருப்பது அவர்கள் ஸ்டாலினை முதல்வராக்கி விடுவார்கள் என ஸ்டாலின் நினத்துக்கொண்டிருக்கிறார் என்பதாக தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*