குழந்தை குரல் பாடகி எம்.எஸ். ராஜேஸ்வரி விடைபெற்றார்!

ஸ்டாலினை எனக்கு எப்போதும் பிடிக்காது: விஜயகாந்த்

தொலைக்காட்சிகளில் மட்டும் செல்வாக்கோடு இருக்கும் பாஜக!

சமூக விஞ்ஞானிகள் ராகவன்,சுமந்த் சி ராமன் இனி என்ன செய்வார்கள்?

நிரந்தர ஓய்வெடுத்துக் கொண்ட எம்.எஸ்.ராஜேஸ்வரி என்ற குழந்தைக் குரல் பாடகி.“அம்மாவும் நீயே அப்பாவும் நீயே” என்று களத்தூர் கண்ணம்மாவில் தன் முப்பது வயது குரலில் அப்போதைய ஆறு வயதுக் குழந்தைக் கமலுக்குக் குரல் கொடுத்தவர் தான், தன் அறுபது வயதில் பேபி ஷாம்லியின் ஆறு வயதுக் குரலாக “பாப்பா பாடும் பாட்டு கேட்டு தலைய ஆட்டு” (துர்கா),”யக்கா யக்கா யக்கா கிளியக்கா” (செந்தூர தேவி) பாடிய புதுமை படைத்தவர்.

எம்.எஸ்.ராஜேஸ்வரி பற்றிச் சட்டென்று நினைவுக்கு வரும் “புதுப் பெண்ணின் மனசைத் தொட்டுப் போறவரே” (பராசக்தி), “மண்ணுக்கு மரம் பாரமா” ( தை பிறந்தால் வழி பிறக்கும்), “நான் சிரித்தால் தீபாவளி” (ஜமுனா ராணியுடன் நாயகனில்), இவற்றோடு ஒப்பிடுகையில் இன்னும் எனக்கு மனசுக்கு நெருக்கமாக இருக்கும் “சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே சங்கீத வீணையும் ஏதுக்கம்மா (பாலசரஸ்வதியுடன் மகாதேவி படத்தில்) https://youtu.be/faocj4sZf2g பாடல் எல்லாவற்றிலுமே குழந்தைத் தனம் ஒட்டிய இந்தப் பாடகியின் சிறப்பான குரலில் கிறங்கியிருக்கிறேன்.

போய் வாருங்கள் பாட்டுக் குயிலே, உங்கள் குரல் எங்களுடன் மிச்சமும் இருக்கும்.

-கானாபிரபா முகநூல் பதிவிலிருந்து

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*