யார் பத்திரிகையாளர்கள் :உள் வீட்டுப் பஞ்சாயத்து!

பத்திரிகையாளர் மீது ஆபாச தாக்குதல்:கண்டன அறிக்கை!

குழந்தை குரல் பாடகி எம்.எஸ். ராஜேஸ்வரி விடைபெற்றார்!

ஸ்டாலினை எனக்கு எப்போதும் பிடிக்காது: விஜயகாந்த்

தொலைக்காட்சிகளில் மட்டும் செல்வாக்கோடு இருக்கும் பாஜக!

சமூக விஞ்ஞானிகள் ராகவன்,சுமந்த் சி ராமன் இனி என்ன செய்வார்கள்?

பத்திரிக்கையாளர்களை பாதுகாப்போம்கிற கோஷமெல்லாம் நல்லாதான் இருக்கு. ஆனா யாரெல்லாம் பத்திரிக்கையாளர்கள் என்கிற உள்வீட்டு பஞ்சாயத்தே இன்னும் முடியலை. தமிழ்நாட்டில் ஆங்கில பத்திரிக்கையாளர்கள் தமிழ் ஊடகவியலாளர்களை படுகேவலமா தான் பார்ப்பாங்க. பத்திரிக்கையாளர் சந்திப்புக்காக காத்திருக்கும்போது கூட தமிழ் பத்திரிக்கையாளர்களோடு சரிக்கு சமமா சேர்ந்து நிற்பது கூட கேவலம்னு நினைக்கிற ஆங்கில பத்திரிக்கையாளர்கள் தான் இங்கே அதிகம். ஆனா இந்த இரு தரப்பாருமே கட்சிப்பத்திரிக்கைகளில் வேலை செய்பவர்களை கிட்டயே சேர்க்கமாட்டாங்க. அவங்கள்ளாம் ஊடகவியலாளர்களே இல்லைங்கறது இந்த இருதரப்பு உத்தமர்களின் ஏகோபித்த கருத்து. அடுத்து சென்னைக்கு வெளியில இருக்கும் பத்திரிக்கையாளர்களை சென்னை பத்திரிக்கையாளர்கள் நடத்தும் விதத்தை கேட்டா தமிழ் தொலைக்காட்சித்தொடர்களில் வரும் மாமியார்கள் மருமகள்களுக்கு செய்யும் கொடுமைகளைவிட பெருங்கொடுமைகள் தெரியவரும். இதையெல்லாம் தாண்டி freelance journalists, independent journalistsனு அமைப்புக்கு வெளியில் இயங்கும் ஊடகவியலாளர்கள் நம்ம ஊரு நரிக்குறவர்கள் மாதிரி. அவங்க எதிலும் சேர்த்தியில்லை. நாடோடிகள் மாதிரி. எந்த அமைப்பிலும் இருப்பதும் இல்லை. அமைப்பாக இயங்குவதும் இல்லை. அமைப்புகளும் அவர்களை அரவணைப்பதும் இல்லை. இதை தாண்டி TV Anchors என்கிற ஊடக உலக நட்சத்திரங்களின் அலப்பறைகள் தனி ரகம். பொதுவாக அவங்க காலெல்லாம் தரையிலயே படாது. வானத்திலேயே மிதப்பார்கள். ஜெயலலிதா தன் கட்சிக்காரர்களை நடத்தியதைவிட இன்னும் கேவலமாகத்தான் இந்த ஊடக உலக நட்சத்திரங்கள் பலர் தன்னுடன் பணிபுரியும் சக ஊடகவியலாளர்களை நடத்துவாங்க. ஆனால் கேமரா முன்னாடி இவங்க நடிக்கும் நடிப்பிருக்கே நூறு சிவாஜிகணேசன்கள் ஒண்ணு சேர்ந்து வந்தாக்கூட இவங்களை மிஞ்ச முடியாது. அப்படி ஒரு தேர்ச்சி. இத்தனை பிளவுகள் இருப்பதால் தான் எஸ் வி சேகருக்கான நியாயமான எதிர்ப்பை கூட உருப்படியாக ஒருமுகப்படுத்த முடியாமல் அல்லது விரும்பாமல் பத்திரிக்கையாளர்கள் பலவாறாக பிளவுபட்டு போராட்டம் நடத்தி இறுதியில் தப்பு செய்த எஸ் வி சேகர் தப்புவதற்கு தெரிந்தோ தெரியாமலோ வழியேற்படுத்தியிருக்கிறார்கள். ஆரம்பத்திலேயே எஸ் வி சேகருக்கான எதிர்ப்பை எப்படி முன்னெடுப்பது என்பதற்கான முறையான கலந்தாலோசனை கூட்டம் நடத்தி அதன்படி செயல்பட்டிருக்க வேண்டும். அதை ஊடகவியலாளர் அமைப்புகளோ அல்லது இந்த போராட்டங்களை முன்னெடுத்தவர்களோ செய்யவில்லை. மாறாக அவசர அவசரமாக ஆளுக்கொரு முன்னெடுப்பை எடுத்ததன் விளைவு தான் இவ்வளவு பெரிய குழப்பத்தில் முடிந்திருக்கிறது. இதில் சுவாரஸ்யம் என்ன்வென்றால் முதலில் இந்த பிரச்சனை காரணமாக ஊடகப்பெருந்தலை ஒருவருக்கு ஆபத்து என்றுதான் “பத்திரிக்கையாளர்களை பாதுகாப்போம்” என்கிற கோஷமே முன்னெடுக்கப்பட்டது. ஆனால் அந்த பெருந்தலையோ ஊடகவியலாளர்களின் பெயரில் முன்னெடுக்கப்படும் வன்முறையை தான் கடுமையாக கண்டிப்பதாக ஆங்கிலத்தில் அதிரடி statement விட்டு ஆங்கில ஊடகவியலாளர்களோடு ஐக்கியமானது. இப்போது பாவம் சிறுமீன்கள் சிக்கியிருக்கின்றன. அவை பாதுகாக்கப்படவேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அதற்கான அனைத்துவிதமான முன்னெடுப்புக்ளையும் ஊடக அமைப்புகள் செய்யவேண்டும். ஆனால் ஒன்று இந்த சம்பவம் ஊடகத்துறையில் இருக்கும் உள்முரண்களை மீண்டும் ஒருமுறை அப்பட்டமாக்கியிருக்கிறது. எந்த போராட்டமானாலும் அதற்கு முறையான முன் திட்டமிடல் தேவை என்பதை உணர்த்தியிருக்கிறது. நெருக்கடி வந்தால் பெருந்தலைகள் தான் முதலில் மன்னிப்பு கேட்டு தம் தலைகளை/நாற்காலிகளை காப்பாற்றிக்கொண்டு தன்னை நம்பி பின்னால் வந்தவர்களை நட்டாற்றில் விட்டு விடுவார்கள் என்பதை இளம் பத்திரிக்கையாளர்களுக்கு வாழ்வில் மறக்கக்கூடாத பாடமாக படிப்பித்திருக்கிறது. Editorகள் இல்லாத தமிழ் ஊடகவெளியில் இயங்கும்படி சபிக்கப்பட்ட இளம்தலைமுறை தமிழ் ஊடகவியலாளர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். ஒருவகையில் நீங்கள் உங்கள் துறையில் அநாதைகள். பட்டுத்தெரிந்து தெளியத்தேவையான மன உறுதி உங்களுக்கு கிடைக்க வாழ்த்துக்கள்.

பிகு: இதற்கிடையே இந்த பிரச்சனையை பயன்படுத்தி சிலரை வேலையைவிட்டுத்துரத்திவிட்டு அந்த இடங்களுக்கு தாங்கள் வரத்துடிக்கும் “நடுநிலை பத்திரிக்கையாளர்கள்” பலர் கடந்த சிலநாட்களாக overtime வேலைசெய்கிறார்கள். அவர்களில் சிலர் ஊடக உலக ஜாம்பவான்கள். லட்சக்கணக்கில் சம்பளம். அரசு மற்றும் அரசியல் தலைவர்களுடன் நெருக்கம். சமூகத்தில் celebrity status. ஒரு ஐந்தாண்டுகாலம் இந்தமாதிரி பதவிகளில் இருந்துவிட்டால் கோடிக்கணக்கில் சொத்து சேர்க்க வழிவகைகள் இருக்கும்போது அதற்கான போட்டிகளில் எல்லாவகையான கீழ்மைகளும் அரங்கேறுவது இயல்புதானே? அதுவே இப்போது இந்த விவகாரத்திலும் நடந்துகொண்டிருக்கிறது.

ஊடகவியலாளர் எல்.ஆர்.ஜெகதீசன் முகநூல் பதிவிலிருந்து..

#SaveTamilJournos #தமிழ்_ஊடகங்கள் #TAMILMEDIA #TAMILNADUMEDIA

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*