பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாஜக முதலிடம்!

மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள பாஜகவின் எம்.பி, எம்.எல்.ஏக்களே அதிக அளவில் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். மேலும் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் முதலிடம் பிடித்திருப்பதும் பாஜகவைச் சேர்ந்தவர்கள்தான் என்று அறிக்கை ஒன்று கூறுகிறது.
ஜனநாயக சீர்திருத்தச் சங்கம், மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பகம் என்ற இரு அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி இந்த தகவல் தெரியவந்துள்ளது.
இந்திய சட்டமன்றங்கள், மற்றும் எம்.பிக்களாக இருப்பவர்களில் 4,896 பேரின் வேட்புமனுக்களில் 4,845 பேருடைய வேட்புமனுக்களை தேர்தல் கண்காணிப்பு அமைப்பு ஆய்வு செய்தது. 769 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 4,077 சட்டமன்ற உறுப்பினர்களின் வேட்புமனுக்களையும் ஆய்வு செய்தது.
இதில், 1,580 பேர் அதாவது 33% நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மீது குற்றவழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. இவர்களில் 48 பேர் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர். இதில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளை ஆய்வு செய்த போது பாரதீய ஜனதாக் கட்சி முதலிடத்திலும், சிவசேனா இரண்டாம் இடத்திலும்,திரிணாமூல் காங்கிரஸ், மூன்றாம் இடத்திலும், காங்கிரஸ் அடுத்தபடியாகவும் உள்ளது என்கிறது அந்த அறிக்கை. பாஜகவைச் சேர்ந்த 12 எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் வழக்குகள் பதியப்பட்டு அதை எதிர்கொள்கிறார்கள்.
இதே போன்று சாதி,மதம் போன்ற விவகாரங்களில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசுவதில் பாரதீய ஜனதா எம்.பி, எம்.எல்.ஏக்களே முதலிடம் பிடிக்கிறார்கள். வெறுப்புணர்வை தூண்டும் விவகாரத்தில் 15 எம்.பிக்கள், 43 எம்.எல்.ஏக்கள் என 58 பேர் வழக்குகளை எதிர்கொள்கிறார்கள். இதில், பாஜக எம்,பிக்கள் 10 பேர் உட்பட 27 பேர் வழக்கை எதிர்கொண்டு முதலிடம் பிடிக்கிறார்கள். பாஜகவைப் போல தெலுங்குதேசம், ராஷ்டீரிய சமிதி, சிவசேனா, உள்ளிட்ட கட்சிகளும் இதே வழக்குகளில் சிக்கியுள்ளார்கள்.ஆனாலும் வெறுப்பை விதைப்பதில் பாஜகதான் முதலிடத்தில் உள்ளது.
மத்திய குடிநீர் மற்றும் கழிவுநீர் பாசன துறை அமைச்சராக இருக்கும் உமாபாரதி மற்றும் 8 மாநில முதல்வர்கள் மீதும் வெறுப்புணர்வை தூண்டிய வழக்கு உள்ளதாக கூறுகிறது இந்த அறிக்கை.
அரசியலில் இருந்து கிரிமினல்களை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை இந்தியா முழுவதும் பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வந்த போதிலும் நாளுக்கு நாள் அரசியலில் கிரிமினல் மயம் அதிரித்து வருகிறதே தவிற குறைந்தபாடில்லை.

ஸ்டாலினை எனக்கு எப்போதும் பிடிக்காது: விஜயகாந்த்

தொலைக்காட்சிகளில் மட்டும் செல்வாக்கோடு இருக்கும் பாஜக!

சமூக விஞ்ஞானிகள் ராகவன்,சுமந்த் சி ராமன் இனி என்ன செய்வார்கள்?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*