தமிழகம் காஷ்மீராக மாற்றப்படுகிறதா?

S.V.சேகர் முன்ஜாமீன் மனு விசாரணையின் போது நடந்தது என்ன?

பத்மா சுப்பிரமணியம் அவர்களே வேண்டாம் இந்த படுபாதகம்:சாவித்திரிகண்ணன்

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாஜக முதலிடம்!

இந்தியாவிலேயே அமைதியான மாநிலம் என்ற பெயர் பெற்றது தமிழகம்தான். பொதுவாக வட இந்தியாவை விட தென்னிந்தியாவில் அமைதி நிலவினாலும், கேரளத்தில் நடைபெறும் அரசியல் படுகொலைகள் கூட தமிழகத்தில் நடைபெறுவதில்லை. இப்போது சாதி உணர்வு காரணமாக பெண்கள் மீதான வன்முறைகள் ஆங்காங்கு அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு பிரச்சனைகளுக்கு தமிழகத்தில் எழுந்திருக்கும் எதிர்ப்புணர்வும், போராட்டச் சூழலும் தமிழகத்தை காஷ்மீர் போல மாற்றுகிறதோ என்ற கேள்வி பரவலாக எழுகிறது.
இந்தியாவிலேயே அதிக அளவு போராட்டங்கள் நடைபெறுவதில் தமிழகம் முதல் மாநிலமாக உருவாகியிருக்கிறது. ஜல்லிக்கட்டு, நீட் எதிர்ப்பு போராட்டம், காவிரி மேலாண்மை வாரியம் என தமிழகமே ஒரு போர்க்களம் போல மாறி மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கொந்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், கடந்த 2015-ஆம் ஆண்டு மட்டும் தமிழகத்தில் 20,450 போராட்டங்களுடன் தமிழகம் முதலிடத்திலும், பஞ்சாப் மாநிலம் 13 ஆயிரத்து 89 போராட்டங்களுடன் இரண்டாம் இடத்தையும் பிடித்திருக்கிறது. மூன்றாவது இடத்தை உத்தரகாண்ட் மாநிலம் பெற்றுள்ளது.
வழக்கமாக போராட்டங்கள் என்றால் காஷ்மீர் மாநிலம்தான் நம் நினைவுக்கு வரும். முழுக்க இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மாநிலமான காஷ்மீரை விட மக்கள் கொந்தளிப்பு அதிகம் உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது.காவிரி டெல்டாவை பெட்ரோலிய மண்டலமாக அரசு மாற்றி விட்டதோ என தமிழக மக்கள் அஞ்சுகிறார்கள். இது உருவாக்கப் போகும் தாக்கமும் பயமும் மக்களிடம் அதிகம் உள்ள நிலையில், பெரும் போராட்டங்கள் வெடிக்கலாம் என்ற எண்ணம் பொதுவாக உள்ளது.
இந்நிலையில்தான் காவிரி டெல்டா மாவட்டங்களில் மத்திய துணை இராணுவப்படையை திடீரென பாதுகாப்பிற்கு இறக்கியிருக்கிறது. இது மக்களை அச்சுறுத்துகிறது. ஜெயலலிதா மரணத்தின் பின்னர் தமிழகத்தில் ஆட்சி செய்யும் எடப்பாடி பழனிசாமி அரசு தோல்வியடைந்த ஒரு அரசாக இருக்கிறது. தமிழகத்தின் எந்த உரிமையையும் இவர்களால் பேண முடியவில்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் தமிழகத்திற்கு வேண்டிய நிதியைக் கூட பெற முடியாத நிலையில்தான் அரசு உள்ளது.
இதற்கிடையில், தமிழகத்தில் நேரடியாக ஆட்சியைப் பிடிக்கும் ஆசையோடு பாஜக களமிரங்கியிருக்கிறது. அது சாத்தியமில்லை என்பதை தமிழகத்தில் நடந்து வரும் மக்கள் போராட்டங்களும், எதிர்ப்புணர்வும் எடுத்துக்காட்டும் நிலையில், அமைதியாக இருக்கும் தமிழகம் காஷ்மீர் போல மாற்றப்பட்டு நிலைமையை பாஜக சீரழித்து விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*