’காலா’ மூலம் திருமாவின் வாக்கு வங்கியை குறி வைக்கும் ரஜினி?

காலா தொடர்பான அரிய செய்திகள்

நாடாளுமன்ற தேர்தலையொட்டி:சமூக வலைத்தளங்களுக்கு தடை வரலாம் -ஏன்?

மருத்துவர் காஃபில்கானுக்கு நடந்தது என்ன? -கடிதத்தின் தமிழாக்கம்!

அதிமுக உண்ணாவிரதம் யாருக்கு எதிராக நடத்தப்பட்டது!

வலுவிழந்தது வன்கொடுமை தடுப்புச் சட்டம்!

உண்டு உண்டு உண்ணாவிரதம் இருந்த அதிமுகவினர்!

தாய் கண்ணெதிரில் இளைஞரை கட்டி வைத்து நொறுக்கிய டிராபிக் போலீஸ்:video

இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் பிரமாண்டமான தயாரிப்பான  ‘காலா’ தலித் சினிமா என்றும், தலித் சினிமா இல்லை என்றும் விவாதிக்கப்பட்டு வருகிறது. தாழ்த்தப்பட்ட  சாதியில் பிறந்த இயக்குநர் ரஞ்சித் இயக்கியது மூன்றே படங்கள்தான். ஆனால் மூன்றும் வெற்றிப்படங்கள்.  2012 -ல் வெளியான அட்டக்கத்தி தலித் சினிமா என்ற முத்திரை இல்லாமல் வெற்றி பெற்றது. அதன் பின்னர் வெளியான  ‘மெட்ராஸ்’ வெளியாகி  ஹிட்டான பிறகு தலித் சினிமா என்று தலித் ஆர்வலர்களால் பேசப்பட்டது.அதுவரை மெட்ராஸ் தலித் சினிமா என்பது யாருக்கும் தெரியவில்லை. அம்பேத்கர், பெரியார், நீலம் உள்ளிட்ட குறியீடுகள் மூலம் அது தலித் சினிமாவாக இருக்கிறது என ரஞ்சித் ஆதரவாளர்கள் கூறி வந்த நிலையில், இதை ரஞ்சித்தும் விரும்பி ரசித்து வந்தார். நீலம் என்ற அறக்கட்டளை மூலம் தலித் பண்பாட்டு. கலை இலக்கிய செயல்பாடுகளையும் நடத்தி வந்த ரஞ்சித்திற்கு 2015-ல் வெளியான கபாலி மிகப்பெரிய  ஹிட் கொடுத்தது. ரஜினிக்கும் அது சூப்பர் டூப்பர் ஹிட் படமாக அமைந்த நிலையில் கபாலியும் தலித் சினிமா என்று ரஞ்சித் ரசிகர்கள் பேசியும், எழுதியும் வந்தனர்.

அந்த வெற்றியைத்  தொடர்ந்து தனது அடுத்த படத்தையும் இயக்கும் வாய்ப்பை ரஞ்சித்திற்கே கொடுத்தார் ரஜினி.  மும்பை தாராவி வாழ்க்கையை  மையமாக வைத்து  ‘காலா’ உருவானது. இப்போது ஆடியோ வெளியீட்டு விழா முடிந்து படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியிருக்கும் நிலையில்,  ‘காலா’  தலித் சினிமா என்று நேரடியாகவும், மறைமுகமாகவும் தலித் ஆர்வலர்கள் பேசியும் எழுதியும் வருகிறார்கள். ஆனால், ரஞ்சித்தை இதற்கு முன்னர் ஆதரித்த பலர் இப்போது ஆதரிக்க தயாராக இல்லை. குறிப்பாக விடுதலைச் சிறுத்தைகள் பிரமுகரும் எழுத்தாளருமான ரவிக்குமார் ரஞ்சித்தையும், காலாவையும், ரஜினியையும் கடுமையாக விமர்சிக்கிறார்.

ரஜினி அரசியலுக்கு வரும் நிலையில் அறிவுத்தளத்தில் அவர் மீது பல் வேறு விமர்சனங்கள் முன் வைக்கப்படுகிறது. இன்னொரு பக்கம் ரஜினி  அரசியலுக்கு வருவதற்கான பின்னணி வேலைகளை முடுக்கி விட்டு ரஜினி மன்றங்களை பலப்படுத்தி வரும் நிலையில், ‘காலா’ மூலம் தலித் வாக்குவங்கியை கைப்பற்ற ரஜினி முயன்றால் அது இயக்குநர் ரஞ்சித்தை அரசியல் ரீதியாக பாதுகாத்த விடுதலைச்  சிறுத்தைகள் மற்றும் அதன்   தலைவர் திருமாவளவன் 30 ஆண்டுகளுக்கு மேலாக உழைத்து வைத்திருக்கும் தலித் வாக்கு வங்கியை சிதைத்து விடும் என  விடுதலைச் சிறுத்தைகளே கருதுகிறார்கள். மேலும், சமீபத்தில் அருந்தயர்களுக்கு எதிரான சுவர் என்று பேசப்பட்ட தீண்டாமைச் சுவர் விவகாரத்தில் இயக்குநர் ரஞ்சித் சென்று அருந்தயர் மக்களுக்கு ஆதரவாக ஒரு போராட்டம்  நடத்தினார். இதுவும் விடுதலைச் சிறுத்தைகள் ரஞ்சித் மீது கடுப்பில் இருக்கக் காரணம். இந்நிலையில், அரசியலுக்கு வரும் அதற்கு முன்னர் கலாவை வைத்து தன் அரசியலுக்கு  பயன்படுத்தினால் அதற்கு நாம் பலியாக வேண்டாம்.

ரஞ்சித் எடுத்திருப்பது வணிக ரீதியாக  ஒரு சினிமா. படம் ஓடினால் ரஜினிக்கும், ரஞ்சித்திற்கும் லாபம் இதனால் அரசியல் ரீதியாக தலித் மக்களுக்கோ தலித் மக்களின் அரசியல் சக்திகளுக்கோ எந்த ஒரு பயனும் இல்லை என்று சில தலித் அமைப்புகள் ஆலோசித்து வருகின்றனவாம்.

#KAALA #KAALA_RAJINI #TAMILKAALA  #காலா  #ரஜினி #இயக்குநர்_ரஞ்சித்

 

 

 

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*