நாடாளுமன்ற தேர்தலையொட்டி:சமூக வலைத்தளங்களுக்கு தடை வரலாம் -ஏன்?

மருத்துவர் காஃபில்கானுக்கு நடந்தது என்ன? -கடிதத்தின் தமிழாக்கம்!

அதிமுக உண்ணாவிரதம் யாருக்கு எதிராக நடத்தப்பட்டது!

வலுவிழந்தது வன்கொடுமை தடுப்புச் சட்டம்!

உண்டு உண்டு உண்ணாவிரதம் இருந்த அதிமுகவினர்!

தாய் கண்ணெதிரில் இளைஞரை கட்டி வைத்து நொறுக்கிய டிராபிக் போலீஸ்:video

இந்தியாவில் உள்ள அச்சு,காட்சி, டிஜிட்டல் ஊடகங்களில் பெரும்பாலானவை பாஜக ஆதரவுச் ஊடகங்களாகவே உள்ளன. “கண்டசா காரில் போனால் எளிமை யோகி” “டாய்லெட்டில் அமர்ந்து கக்கா போனார் பாஜக முதல்வர்” என்று வரும் செய்திகள் தமிழில் வருவதை நீங்கள் கவனித்திருப்பீர்களோ இல்லையோ இவை அனைத்தின் பின்னாலும் பணம் உண்டு.
நிற்க இப்போது பொய்ச் செய்தி பற்றி பாஜக பதறுகிறது. காரணம் சூழல் அவர்களுக்கு உகந்ததாக இல்லை. தொலக்காட்சிகள் டி.ஆர்.பிக்காகவேனும் பிரச்சனைகளை ஓரளவு பேசத்துவங்கியதும். பொய்ச் செய்தி கூச்சலை முன்னரங்கிற்கு கொண்டு வருகிறார்கள்.
பொய் செய்திகளுக்கு பல வடிவங்கள் உண்டு. தவறான தகவல்களை வைத்து நாம் எழுதுவது கூட பொய்ச் செய்தி ஆகிவிடும். திட்டமிட்டு எழுதப்படும் பொய்ச் செய்திகளும், உண்டு.ஆனால் பாஜக அகராதியில் பொய் செய்திக்கு ஒரே அர்த்தம்தான். பாஜகவுக்கு எதிராக வருபவை பொய்ச் செய்தி, காங்கிரஸ் கட்சிக்கு எதிராக இருப்பவை உண்மை செய்தி அவளவுதான். 2014 மோடி தேர்தலை எதிர்கொண்டதே பொய்ச் செய்திகள் மூலம்தான். அப்படி சொல்லப்பட்ட பிரமாண்டமான பொய்களின் ஒன்றுதான் ஸ்பெக்ட்ரம் ஆனால் இப்போது சூழல் மாறி வருகிறது. பாஜகவின் வசந்தகாலம் முடிவுக்கு வருகிறது. மோடி அலை ஓய்ந்து பாஜகவை தாக்கும் சுனாமி அலையாக சூழல் வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது.
ஆக, அவர்கள் ஊடகங்களை குறிப்பாக சமூக வலைத்தளங்களை வருகிற தேர்தலுக்குள் முடக்கப்பார்ப்பார்கள். வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல்ல் ஊடகங்கள் சுதந்திரமாக செயல்பட முடியாத சூழல் உருவாகலாம். அதற்குண்டான அறிகுறிகள் தென்படுகின்றன. மிக முக்கியமான எப்படி பாஜகவுக்கு ஆதரவாக 2014-ல் சமூக வலைத்தளங்கள் பயன்பட்டதோ அதை விட பல மடங்கு எதிர்ப்பு சமூக வலைத்தளங்களில் தேர்தலையொட்டி பதிவாகும் என்பதால் சமூக வலைத்தளங்களுக்கு தேர்தலையொட்டி தடை வந்தாலும் ஆச்சரிப்பட ஏதுமில்லை!

அதிமுக நாடக உண்ணாவிரதம்!

பிரதமர் மோடியின் சென்னை பயணம் ரத்து?

காவிரி நீர் உரிமை :புதுச்சேரி மக்களுக்கு துரோகம் இழைத்த கவர்னர் கிரன்பேடி!

’ஸ்கீம்’ என்பது காவிரி மேலாண்மை வாரியம் கிடையாது : கானலானது காவிரி-கைவிரித்த உச்சநீதிமன்றம்!

அதிமுக எம்.பி முத்துக்கருப்பன் ராஜிநாமா நாடகமா?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*