இரும்புத்திரை படத்திற்கு பாஜக எதிர்ப்பு:காட்சிகள் ரத்து!

ராகுலுக்கு புகழாரம் சூட்டிய சிவசேனா இதழ்!

’காலா’ மூலம் திருமாவின் வாக்கு வங்கியை குறி வைக்கும் ரஜினி?

நாடாளுமன்ற தேர்தலையொட்டி:சமூக வலைத்தளங்களுக்கு தடை வரலாம் -ஏன்?

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்திற்கு பாஜகவினர் தெரிவித்த எதிர்ப்பை அடுத்து நடிகர் விஷால் நடிப்பில் வெளியாகி உள்ள இரும்புத்திரை படத்திற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து சென்னை காசி திரையரங்கத்தின் எதிரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏற்கனவே பாஜகவை விமர்சித்து மிரட்டலுக்கு உள்ளான நடிகர் விஷால் நடிப்பில் இரும்புத்திரை படம் இன்று வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில், ஆதார் தகவல் திருட்டு, டிஜிட்டல் இந்தியா தொடர்பான வசனங்கள் இடம் பெற்றிருக்கின்றன. இந்த வசனங்கள் மோடி அரசையும், மத்திய அரசையும் இழிவுபடுத்துகிறது என்று இந்து அமைப்புகள் குற்றம் சுமத்தின. படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய இந்த வசனங்களை நீக்க வேண்டும் என்றும், நீக்கா விட்டால் விஷால் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றும் அறிவித்த இந்து அமைப்பினர் மற்றும் பாஜகவினர் இரும்புத்திரை படம் ஓடும் சென்னை காசி திரையரங்கின் எதிரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
போலீசாரின் சமாதானத்தை அடுத்து அவர்கள் கலைந்து சென்ற நிலையில் இரும்புத்திரை திரைப்படம் ஓடும் திரையரங்கங்களுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதோடு, விஷால் வீட்டிற்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய விஷால்,:-
“ படத்தில் தவறான கருத்து எதுவும் இல்லை. படத்தைப் பார்க்காமல் போராட்டம் எதுவும் நடத்த வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டார்.

#irumputhirai #vishal #tamilcinemanews #kodambakkamnews

மருத்துவர் காஃபில்கானுக்கு நடந்தது என்ன? -கடிதத்தின் தமிழாக்கம்!

தமிழகம் காஷ்மீராக மாற்றப்படுகிறதா?

S.V.சேகர் முன்ஜாமீன் மனு விசாரணையின் போது நடந்தது என்ன?

பத்மா சுப்பிரமணியம் அவர்களே வேண்டாம் இந்த படுபாதகம்:சாவித்திரிகண்ணன்

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாஜக முதலிடம்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*