ராகுலுக்கு புகழாரம் சூட்டிய சிவசேனா இதழ்!

’காலா’ மூலம் திருமாவின் வாக்கு வங்கியை குறி வைக்கும் ரஜினி?

நாடாளுமன்ற தேர்தலையொட்டி:சமூக வலைத்தளங்களுக்கு தடை வரலாம் -ஏன்?

மருத்துவர் காஃபில்கானுக்கு நடந்தது என்ன? -கடிதத்தின் தமிழாக்கம்!

தமிழகம் காஷ்மீராக மாற்றப்படுகிறதா?

S.V.சேகர் முன்ஜாமீன் மனு விசாரணையின் போது நடந்தது என்ன?

பத்மா சுப்பிரமணியம் அவர்களே வேண்டாம் இந்த படுபாதகம்:சாவித்திரிகண்ணன்

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாஜக முதலிடம்!
ராகுல் காந்தி புத்திக்கூர்மையுடன் உள்ளார் என்று அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளது சிவசேனாவின் ‘சாம்னா’ இதழ்.
துவக்கத்தில் பாஜக கூட்டணியில் இருந்த சிவசேனா பின்னர் அக்கூட்டணியில் இருந்து விலகியதோடு பாஜக மீதும், மோடி மீதும் கடும் விமர்சனங்களை முன் வைத்து வந்தது. பாஜகவுக்கு எதிராக அரசியல் அரங்கில் தீவிரமாக பங்காற்றும் எதிர்க்கட்சிகளையும் அது சந்தித்து வந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு சாம்னா இதழ் புகழாரம் சூட்டியுள்ளது.
அது எழுதியுள்ள கட்டுரையில்:-
“2019 -ஆம் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராகத் நான் இருப்பேன். பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றினால் நானே பிரதமராக பதவியேற்பேன் என்று ராகுல்காந்தி தெரிவித்திருந்தார். ராகுல் காந்தியின் இந்த பேச்சை சுட்டிக்காட்டியுள்ள சாம்னா இதழ் ராகுல் காந்தியின் துணிச்சலான இந்த பேச்சை பாஜக வரவேற்க வேண்டும் அதை விட்டு விட்டு. நாடு முதிர்ச்சியற்ற, புகழ்பெற்ற தலைவர்களை ஒரு போதும் விரும்பாது , ஏற்றுக் கொள்ளாது என்று சொல்லும் பிரதமர் மோடியின் கூற்றை விமர்சித்துள்ளது. நாட்டிற்கு பிரதமர் யார் என்பதை முடிவு செய்ய வேண்டியது மக்கள் தானே தவிற பாஜக அல்ல, காங்கிரஸ் வென்று ராகுல் பிரதமராவதை மக்கள் முடிவு செய்வார்கள் . 2014- ஆண்டு பார்த்த ராகுல்காந்தி போல இப்போது அவர் இல்லை. அவரிடம் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. புத்திக்கூர்மையுடைவராகவும், மன வலிமை மிக்கவராகவும் அவர் வளர்ந்து வருகிறார்.2019-ஆம் ஆண்டு வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய சவாலாக அவர் பாஜகவுக்கு இருப்பார். அதை குஜராத் தேர்தலில் நிரூபித்து விட்டார்” என்று எழுதியுள்ளது சாம்னா.

#TAMILNEWS #TAMILNADUPOLITICALNEWS #POLITICAL

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*