கர்நாடகத்தில் பாஜக ஆட்சிக்கு வர வேண்டும் என்கிறார் பழனிசாமி!

திமுகவுக்கு எச்சரிக்கை: தினகரனோடு இணைந்த காங்கிரஸ்!

நடிகையர் திலகம் படம் பார்த்தேன்:மனுஷ்யபுத்திரன்

இரும்புத்திரை படத்திற்கு பாஜக எதிர்ப்பு:காட்சிகள் ரத்து!

ராகுலுக்கு புகழாரம் சூட்டிய சிவசேனா இதழ்!

’காலா’ மூலம் திருமாவின் வாக்கு வங்கியை குறி வைக்கும் ரஜினி?

நாடாளுமன்ற தேர்தலையொட்டி:சமூக வலைத்தளங்களுக்கு தடை வரலாம் -ஏன்?
காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் கர்நாடக மாநில தேர்தலை மனதில் கொண்டு மத்தியில் ஆளும் பாஜக மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்திற்கு துரோகம் இழைத்த நிலையில், பாஜக தலைவர்களில் பலர் கர்நாடக மாநில தேர்தலில் பாஜக வென்றால் காவிரி மேலாண்மை வாரியம் அமையும் என்று கருத்து தெரிவித்து வந்தனர்.
கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக தோற்றால் தமிழகத்திற்கு தண்ணீர் வருமே தவிற வென்றால் ஒரு போதும் தண்ணீர் வராது.காரணம் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் ஆதரவோடு ஒரு வேளை பாஜக ஆட்சி அமைத்தாலோ,தனித்து ஆட்சி அமைத்தாலோ ஒரு போதும் காவிரி மேலாண்மை வாரியமும் அமைக்காது. காவிரியில் தண்ணீரும் வராது. அப்படி காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக நடந்து கொண்டு பாஜகாவால் ஒரு போதும் கர்நாடக மாநிலத்தில் ஆட்சியும் நடத்தி விட முடியாது.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் காவிரியில் நல்லது நடக்கும் என்ற பாஜகவின் கருத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் வலியுறுத்தியுள்ளார். “கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் தமிழக விவசாயிகளுக்கு நல்லது நடக்கும்.காவிரி பிரச்சனை தீரும்” என்ற கருத்தை தெரிவித்திருப்பதன் மூலம் பாஜகவின் கருத்திற்கு வலுச்சேர்த்திருக்கிறார் பழனிசாமி.

#TAMILNADUNEWS #TAMILPOLITICALNEWS #TAMILWEP

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*