திமுகவுக்கு எச்சரிக்கை: தினகரனோடு இணைந்த காங்கிரஸ்!

நடிகையர் திலகம் படம் பார்த்தேன்:மனுஷ்யபுத்திரன்

இரும்புத்திரை படத்திற்கு பாஜக எதிர்ப்பு:காட்சிகள் ரத்து!

ராகுலுக்கு புகழாரம் சூட்டிய சிவசேனா இதழ்!

’காலா’ மூலம் திருமாவின் வாக்கு வங்கியை குறி வைக்கும் ரஜினி?

நாடாளுமன்ற தேர்தலையொட்டி:சமூக வலைத்தளங்களுக்கு தடை வரலாம் -ஏன்?
கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடந்து வரும் நிலையில், தமிழகத்தில் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கர்நாடக மாநில தேர்தலில் தினகரனின் ஆதரவைப் பெற்று தமிழர்கள் வாழும் பகுதியில் பிரச்சாரம் செய்து வந்தது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவை ஒட்டிய பகுதிகளில் தமிழர்கள் அதிக அளவில் வாழ்ந்து வருகிறார்கள். இங்கு வாழும் தமிழர்கள் தொழில் நிமித்தம் அங்கு குடியேறியவர்கள் அல்ல பாரம்பரியமாக அங்கு வாழ்ந்து வருகிறவர்கள். பெங்களூர் கர்நாடக மாநிலத்திற்கு பிரித்துக் கொடுக்கப்பட்ட போது பெரும்பான்மையாக அங்கு வாழும் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், தமிழர்கள் வாக்கு வங்கியை குறிவைத்தும் அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களை களமிரக்குகின்றன.
காங்கிரஸ் கட்சி தமிழர்களை வேட்பாளர்களாக நிறுத்தியுள்ள பகுதிகளில் தமிழக காங்கிரஸ் தலைவர்களை அழைத்து பிரச்சாரம் செய்ய வைத்தது. அது போல பாஜக தமிழக தலைவர்களும் பாஜக வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்த நிலையில், காங்கிரஸ் கட்சி தினகரன் அணியில் பெங்களூர் தமிழர்களிடம் செல்வாக்கோடு இருக்கும் புகழேந்தியை சந்தித்து காங்கிரஸ் கட்சியை ஆதரிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
அவர் தினகரனுடன் ஆலோசனை செய்து காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரிக்கும் முடிவை எடுத்து அவர்களுக்காக வேலையும் பார்த்தனர்.
தினகரன் கட்சியினர் நூற்றுக்கணக்கனவர்கள் கர்நாடக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு காங்கிரஸ் வேட்பாளர்களுக்காக வேலை பார்த்ததோடு. கர்நாடக தமிழர்களின் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் காங்கிரஸ் கட்சிக்கு பெற்றுக்கொடுக்கும் வேலையை பார்த்து வருகிறார்கள்.
காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசருக்கும், திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கும் ஒத்துப் போக வில்லை. ஸ்டாலின் காங்கிரஸ் கட்சியோடு அனுசரணையோடு சென்றாலும் திருநாவுக்கரசர் ஆரம்பம் முதலே திமுக கூட்டணியை பெரிதாக விரும்பவில்லை. வரவிருக்கும் தேர்தலில் கடந்த தேர்தல்களைப் போல பெரிய அளவு தொகுதிகளை திமுக கொடுக்காது என்னும் நிலையில், தினகரனுடன் திருநாவுக்கரசர் கை கோர்த்து திமுகவுக்கு புதிய எச்சரிக்கையை கொடுத்திருக்கிறார் என்று அரசியல் அரங்கில் பார்க்கப்படுகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*