காங் தனிப்பெரும்பான்மை பெரும்:பாஜக ஆட்சியமைக்கும் எப்படி?

பாஜக ஆட்சிக்கு வர வேண்டும் என்கிறார் பழனிசாமி!

திமுகவுக்கு எச்சரிக்கை: தினகரனோடு இணைந்த காங்கிரஸ்!

நடிகையர் திலகம் படம் பார்த்தேன்:மனுஷ்யபுத்திரன்

இரண்டு தொகுதிகளைத் தவிற 222 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கர்நாடக மாநிலத்தில் இன்று (12-05-2018) நடந்து முடிந்திருக்கிறது. சுமார் 70% சதவிகித வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் கமிஷன் கூறியுள்ள நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் ஆளும் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக அதிக தொகுதிகளில் வெல்லும் வாய்ப்பு உள்ளதாகவும், இரண்டாவதாக பாஜக அதிக இடங்களைப் பெறும் என்றும், மதச்சார்பற்ற ஜனதா தளம் அதிக பட்சமாக 40 இடங்கள் வரை கைப்பற்றும் என்றும் எக்சிட் போல் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இந்த தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் புதியவை அல்ல ஏற்கனவே கடந்த பல வாரங்களாக சமூக வலைத்தளங்களில் பலரும் தெரிவித்து வந்த கருத்துக்களையே ஊடகங்கள் வெளிப்படுத்தியிருக்கிறது.
இக்கருத்துக்கணிப்புகளுக்கு முன்னர் பாஜகவினரின் தடுமாற்றங்களையும் நாம் காண வேண்டும். லிங்காயத்துகள் விவகாரத்தில் அது பின்னடைவைச் சந்தித்தது. இந்து மடாதிபதிகளின் ஆதரவை பாஜக கோரிய போதும் அவர்கள் பாஜகவை ஆதரிக்க மறுத்து விட்டனர். உத்திரபிரதேச கோரக்பூர் மடாதிபதியும் உ.பி முதல்வருமான யோகி ஆதித்யநாத்தையும் பிரதானமாக வைத்து கர்நாடக தேர்தலை எதிர்கொள்ள திட்டமிட்ட மோடி. இரண்டு முறை தேர்தலுக்கு முன்பே கர்நாடக மாநிலத்திற்கு அவரை அனுப்பி வைத்தார்.அவரும் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு அறிவுரைகளை வழங்கினார். ஆனால் மூன்றாவது முறை பயணம் மேற்கொள்வதற்கு முன்னால் சொந்த மாநிலத்தில் நடந்த இரு நாடாளுமன்ற தொகுதிகளிலும் பாஜக தோல்வியடைய யோகியின் கர்நாடக பிரச்சார திட்டம் தோல்வியில் முடிந்தது. கர்நாடக மடாதிபதிகளைக் கையாள யோகியை பயன்படுத்தும் திட்டத்திற்கு ஒரு வகையில் தோல்வியைக் கொடுத்தது அகிலேஷ் யாதவும், மாயாவதியும்தான்.இப்போது, பாஜக அதன் தோல்விப்படிக்கட்டுகளில் பயணிக்கத் துவங்கி விட்டது. அருணாச்சலப்பிரதேசம் துவங்கி மணிப்பூர் வரை அது மாநிலங்களை கைப்பற்றிய விதத்தின் அடிப்படையில் கர்நாடக மாநிலத்திலும் பாஜக ஆட்சியமைக்க முயலும். ஆனால், அதற்கு மதச்சார்பற்ற ஜனதா தளம் 35 தொகுதிகளுக்கு மேல் வென்றாக வேண்டும். சொந்த பலத்தில் அல்லாமல் மதச்சார்பற்ற ஜனதா தளத்தை உடைத்தோ அல்லது அக்கட்சியின் ஆதரவைப் பெற்றோ பாஜக ஆட்சி ஆட்சியமைக்க முயலும் என்றாலும். 15 தொகுதிகளுக்கு மேல் மதச்சார்பற்ற ஜனதா தளம் வெல்லாது என்றே தோன்றுகிறது. காங்கிரஸ் தனிப்பெரும்பான்மை பெறும் அல்லது அதிக தொகுதிகள் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவாகும் என்றே தோன்றுகிறது.
சித்தராமையாவுக்கு ஆப்படிக்க மோடியின் ஆயுதமாக அங்கு அமர்ந்திருக்கிறார் வஜூபாய் வாலா மோடியின் குஜராத் அமைச்சர்வையில் நிதி அமைச்சராகவும், சபாநாயகராகவும் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து மோடியின் நம்பிக்கைக்குரிய விசுவாசியாக இருந்தவரைத்தான் கர்நாடக கவர்னாக்கியிருக்கிறது பாஜக,

எப்படி ஜெ மரணத்தின் பின்னர் பன்னீரையும், பன்னீரை விட சிறந்த விசுவாசியாக இ.பி.எசையும் ஆளுநர் வித்யாசாகரை வைத்து மாற்றிக் கொண்டதோ அப்படி கர்நாடகத்தில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மை பெற்றாலும் கூட ஆட்சியமைக்க விடாது பாஜக….. என்றாலும் மோடியின் அலை முடிந்து விட்டது. என்பதை இந்திய மக்களிடம் இருந்து மறைக்க முடியாது. மேலும் கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சியமைத்தாலும் கூட வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மிகப்பெரிய சவாலாக திகழ்வார் என்பதையும் சேர்த்தே கர்நாடக தேர்தல் பாஜகவுக்கு பதிலாக சொல்லும்!

இரும்புத்திரை படத்திற்கு பாஜக எதிர்ப்பு:காட்சிகள் ரத்து!

ராகுலுக்கு புகழாரம் சூட்டிய சிவசேனா இதழ்!

’காலா’ மூலம் திருமாவின் வாக்கு வங்கியை குறி வைக்கும் ரஜினி?

நாடாளுமன்ற தேர்தலையொட்டி:சமூக வலைத்தளங்களுக்கு தடை வரலாம் -ஏன்?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*