காவிரி மேலாண்மை வாரியம் என்னும் பெயரில் ஏமாற்று வேலை!

பாஜகவுக்கு கதவை மூடிய குமாரசாமி:தாக்குப்பிடிப்பாரா?

பாஜக ஆட்சிக்கு வர வேண்டும் என்கிறார் பழனிசாமி!

திமுகவுக்கு எச்சரிக்கை: தினகரனோடு இணைந்த காங்கிரஸ்!

நடிகையர் திலகம் படம் பார்த்தேன்:மனுஷ்யபுத்திரன்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு. காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக உருவாக்கியுள்ள வரைவுத் திட்டத்திற்கும், அதை செயல்படுத்தப்போகும் வரைவுக்குழுவுக்கும் பெயர் எதையும் வைக்காத நிலையில், உப்புச் சப்பில்லாத அந்த அமைப்புக்கு தமிழக அரசு வாரியம் என்ற பெயரை சூட்டியுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமையும் பட்சத்தில் நான்கு மாநிலங்களின் அணைகளின் கட்டுப்பாடும் வாரியத்தின் கைகளுக்குச் செல்லும், நீர் திறந்து விடும் வேலையையும் அவர்களே செய்வார்கள் என்னும் நிலையில், பாஜக அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. இப்போது மத்திய அரசு அறிவித்துள்ள வரைவுத்திட்டத்தில் அணைகள் அந்தந்த மாநிலங்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும், பழைய முறையைப் போல தண்ணீரையும் அவர்களே திறந்து விடுவார்கள். தண்ணீர் திறந்து விடா விட்டால் வரைவுக்குழுவிடம் புகார் கூறிக் கொள்ளலாம். என்கிறது மத்திய அரசின் வரைவுத்திட்டம்.
அதாவது உச்சநீதிமன்றத்திடம் புகார் அளிப்பதற்கு பதிலாக மத்திய அரசு உருவாக்கியிருக்கும் புதிய அமைப்பிடம் புகார் அளிக்கலாம். மொத்தத்தில் புகார் பெட்டி அமைப்பு போல இது செயல்படும். என்கிற நிலையில், இன்று காவிரி வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று துவங்கியது. மத்திய அரசு தாக்கல் செய்த வரைவு செயல் திட்டம் தொடர்பான தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி மாநில அரசுகள் அறிக்கைகள் தாக்கல் செய்தன.
வழக்கை ஒத்தி வைக்க கர்நாடக அரசு கோரிக்கை விடுத்தது அதை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை.
தமிழக அரசோ வரைவுத்திட்டத்திற்கு மேலாண்மை வாரியம் என்று பெயர் வைக்க வேண்டும் என்றது. அது போல வாரியம் டெல்லியில் அமைய வேண்டும் என்றது.வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி இருக்க வேண்டும் என்றும் கோரியது. இதில் ஓய்வு பெற்ற நீதிபதி கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம் மற்ற கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டது. மொத்தத்தில் அதிகாரம் இல்லாத டெல்டா விவசாயிகளுக்கு எந்த விதமான பயனையும் அளிக்க முடியாத மத்திய அரசின் வரைவுத்திட்டத்திற்கு காவிரி மேலாண்மை வாரியம் என்று பெயர் சூட்டி தமிழக மக்களையும் காவிரி விவசாயிகளையும் ஏமாற்றப் பார்க்கிறார்கள் மாநில ஆட்சியாளர்கள் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*